இந்தியா

இனி ஆண்டுக்கு 2 கேஸ் சிலிண்டர்: செம அறிவிப்பு… குஷியில் மக்கள்.. எங்கே தெரியுமா?

73views
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் மக்களுக்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது அம்மாநில மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் கல்வி அமைச்சர் வகானி, “குஜராத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கியாஸ் சிலிண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது, இதனால், குடிமகன்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 கோடி நிவாரணம் கிடைக்கும். இல்லத்தரசிகளை மனதில் கொண்டு இந்நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. மேலும், சிஎன்ஜி (கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) மற்றும் பைப்டு நேச்சுரல் கேஸ் (பிஎன்ஜி) ஆகியவற்றின் மீதான வாட் வரியையும் 10% குறைத்து மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த வரிகுறைப்பால் சிஎன்ஜி கிலோவுக்கு ரூ. 7 ஆகவும், பிஎன்ஜி ரூ.6 ஆகவும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த இரண்டு சிலிண்டர்கள் இலவச அறிவிப்பால் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 38 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் வாட் வரி குறைப்பால் 14 லட்சம் சிஎன்ஜி வாகன உரிமையாளர்கள் பயனடைவார்கள் என்று, சாமானியர்கள் விலைவாசி பாதிப்பில் இருந்தும் விடுபடுவார்கள் என்றும் குஜராத் அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி சில் தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்த நிலையில், பாஜக அரசே இலவச திட்டத்தை அறிவிப்பதா? என்று சிலரும், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதாலே இது போன்ற அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளதாக சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!