Uncategorized

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த கைத்தறி நகர் பகுதியில் இரும்பு கடையில் ஏற்பட்ட திடீர் விபத்து; புதிதாக திறக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வந்ததால் பெரும் சேதம் தவிர்ப்பு

97views
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த கைத்தறி நகர் பகுதியில் உள்ள துர்கா காலனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்கே மெட்டல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் குமரேசன் இவருக்கும் அந்த பகுதியில் உள்ள ஒரு சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் குமரேசன் இரும்பு கடை அருகே திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது குமரேசன் உடனடியாக திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலை மேலான தீயணைப்புத் துறையினர் முற்றிலுமாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த கடையையில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து பார்த்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

மேலும் புதிதாக திறக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் உடனடியாக வந்ததால் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தப்பியது. மேலும் இது சம்பந்தமாக குமரேசன் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். திடீர் தீ விபத்து சமந்தமாக ஆஸ்டின் பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!