தமிழகம்

பெரும் செல்வவிளை ஊரில் நடைப்பெற்ற 22 -வது விநாயகர் சதுர்த்தி விழா

184views
கன்னியாகுமரி மாவட்டம் பெரும் செல்வவிளை ஊரில் 22 -வது விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகள் சக்தி விநாயகர் இளைஞர் மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடி சிறப்பாக செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக பொது அறிவு வினா விடை கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து சொற்பொழிவு ஆற்றுவதற்காக சமூக சேவகர் -பசுமை நாயகன் மரு.தி.கோ. நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி) வருகை தந்திருந்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களுடன் மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
விழா குழுவினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மரங்களின் சிறப்பை பற்றியும் இயற்கையின் தொடர்பையும் பேசுகையில் கொரோனா காலகட்டத்தில் அனைத்து மக்களும் ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை உணர்ந்தனர் அவ்வேளையிலும் நேச்சுரல் ஆக்சிஜன் ஜெனரேட்டர் என்று கூறி மரங்கள் நடுவதற்கு காரணமாக இருந்ததை தெரிவித்தார். ஆலமரத்தடியிலும் அரச மரத்தடியிலும் வேப்ப மரத்தடியிலும் குளக்கரையிலும் விநாயகர் வழிபாட்டுத் தலங்கள் இருப்பதை காணலாம் அது போல காலையிலும் மாலையிலும் மக்கள வலம் வருவதை காணலாம்.  இதன் மூலம் உடம்புக்கு தேவையான பிராணவாயு அதிகமாக கிடைப்பதற்கும் மலை குன்றுகளில் வழிபாட்டுத் தலங்களும், கோயில்களில் தல விருச்சகம் என்று ஒரு மரத்தை அடையாளப்படுத்தியும் கோவில் தீர்த்தமாக சுனைகள் , கிணறுகள்,தெப்பக்குளங்ள், புண்ணிய நதிகள் சமுத்திர நீராட்டு போன்றவைகள் மூலம் நம் முன்னோர்கள் இயற்கையை பேணி இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தனர். நம் முன்னோர்கள் நாமும் நம் சந்ததியர்களும் இயற்கை பேணுவதை அன்றாட வாழ்வியலாக ஒரு கலாச்சாரமாக செயல் பட பற்பல பழக்கவழக்கங்களை மேற்கொண்டனர் . இந்த கலாச்சார உணர்வு மாறி நவீன மயமாக்குதல் என்ற போர்வையில் இயற்கை அழிப்பதன் மூலம் பஞ்சபூதங்கள் தன் நிலை மாறி நமக்கு பேரிடரை கொண்டு வருகிறது. நம் மூதையார்கள் நமக்காக விட்டு சென்ற இயற்கை செல்வங்களை நாமும் நம் சந்ததிகளுக்காக பாதுகாத்து அனைத்து உயிரினங்களுக்கும் அதற்குரிய மதிப்பளித்து இயற்கைச் சங்கிலி அறுபடாமல் பாதுகாத்து நம் வாழ்வை சிறப்பிப்பது அனைவருக்கும் உகந்தது என்றார்.

சுமார் 35- வருடங்களுக்கு முன்னர் அன்றாடம் பயன்பாட்டிற்கான நீரை விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரும் என்று நான் கூறியது என்பது நடந்தேறி விட்டது அதுபோல் இந்த தருணத்தில் நாம் விழிப்படையாவிட்டால் அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதற்கு காற்றையும் விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை மிக தூரத்தில் இல்லை என்பதை பதிவு செய்கின்றேன் எவ்வாறு இச்சூழ்நிலை மாறியதோ அவ்வாறே சீர்செய்ய நாம் ஒவ்வொருவரும் ‘ கற்போம் கற்போம் இயற்கையை பாதுகாக்க கற்போம் ‘ என்று சூளுரைத்து நாம் பணி செய்வோம் என்றார்.

இதற்கான ஏற்பாடுகளை திரு. மாதவமணி ,இயற்கை விவசாய முன்னோடி முருகதாஸ் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஊர் மக்களோடு இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!