தமிழகம்

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆண்களுக்கான கருத்தடை – வாசக்டெமி விழிப்புணர்வு

31views
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆண்களுக்கான கருத்தடை – வாசக்டெமி விழிப்புணர்வு வாகனத்தைமாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் மருத்துவர் அன்பு செழியன் குடும்பநல மருத்துவர் கலந்து கொண்டு சிகிச்சை முறையின் சிறப்பு அம்சங்களை கூறினார்.
எளிய பாதுகாப்பான வாசக்டமி கத்தியின்றி தையல் இன்றி செய்யப்படுகிறது. ஆனந்த வாழ்க்கை பெற தடை இல்லை. மேலும் பக்க விளைவுகள் எதுவும் இல்லை, கடின உழைப்பினை மேற்கொள்ளலாம். மயக்க மருந்து அவசியமில்லை. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. அளவான குடும்பத்தை அமைக்கலாம். இச் சிகிச்சையின் முறைகளைப் பற்றி எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்வில் மருத்துவர் அன்புச் செழியனோடு மருத்துவ ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!