தமிழகம்

EVM எந்திர வாக்குப்பதிவில் ஓட்டு திருட்டு நடைபெறுவதற்கான ஆதாரம்

772views
2022-ல் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் EVM வாக்கு எந்திரத்தில் நடை பெற்றது. இத் தேர்தலில் பல வார்டுகளில் 170 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு 0 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த 170+ வேட்பாளர்களில் அதிமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக, சிபிஎம், காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளனர்.
ஆதாரங்களை பதிவிறக்க:
https://drive.google.com/file/d/10moA25tiQn5YTf6k_BNBQ0AX1cTAS-qq/view?usp=sharing (PDF)
ஒரு வேட்பாளர் 0 வாக்குகள் பெறுவது எப்படி சாத்தியம்?
இந்த வேட்பாளர்கள் தங்கள் ஓட்டை தங்களுக்கு போட்டிருக்க மாட்டார்களா? இவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், இவர்கள் சார்ந்த கட்சியினர் இந்த வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டிருக்க மாட்டார்களா? இந்த ஓட்டுகள் எல்லாம் மாயமானது எப்படி?
குறைந்த அளவு வாக்காளர்கள் உள்ள வார்டு தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டதால் வேட்பாளர்கள் 0 ஓட்டுகள் பெற்றிருக்கின்றனர். இதனால் EVM ஓட்டு திருட்டு நடைபெற்றிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆனால் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் EVM-ல் வாக்குகள் பதிவாகும். இந்த வாக்குகளில் பெருமளவு திருடப்பட்ட்டாலும் ஓட்டு திருட்டு வெளியில் தெரிய வாய்ப்பே இல்லை.
தமிழ்நாட்டில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வை மூன்றாவது பெரிய கட்சியாக காட்டுவதற்காக அதிமுக, அமமுக, நாம் தமிழர், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் பெருமளவு திருடப்பட்டு பாஜக வுக்கு மாற்றப்பட்டுள்ளது. சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சில வார்டுகளில் பாஜக வேட்பாளருக்கும் 0 ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
EVM முறைகேடுகள் மூலமாகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக 5.5% வாக்குகளை பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் பல வார்டுகளில் அதிமுக வை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி பாஜக இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதாவது திமுக VS பாஜக என தமிழ்நாட்டின் அரசியல் களத்தை மாற்றுவதே நோக்கம். இதற்கான தொடக்கமே பாஜக வுக்கு சாதகமாக 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடந்துள்ள EVM மோசடிகள்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள், IAS, IPS அதிகாரிகள் பெருமளவுக்கு RSS- பாஜக சார்புள்ளவர்களாக இருப்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி EVM மோசடி மூலம் பாஜக நாடு முழுவதும் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது. இதே பாணியைத் தான் தமிழ்நாட்டிலும் கடைப்பிடிக்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் தங்களது வாக்கு வங்கி 30% அளவுக்கு வளர்ந்து விட்டதாகவும் பாராளுமன்ற தேர்தல் முடிவில் இது தெரியும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கேற்றபடி EVM–ல் முறைகேடு செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
(EVM Software/Source Code தொழில்நுட்பம் மூலமாகவே எல்லா மோசடிகளும் நடைபெறுகின்றன. இது பற்றிய முழு விளக்கங்களையும் சந்தேகம் வராதபடி நாடு முழுவதும் EVM மோசடிகளை பாஜக எப்படி அரங்கேற்றி வருகிறது என்பதையும் ஆதாரப்பூர்வமாக விரைவில் வெளியிட உள்ளோம்)
EVM எந்திரத்தில் பயன்படுத்தப்படும் Source Code/Software தொடர்பாக எந்த கேள்வி கேட்டாலும் தேர்தல் ஆணையம் வாய் திறக்க மறுப்பது ஏன்?
EVM தேர்தல் தொடர்பாக பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கும் தேர்தல் ஆணையம் EVM- செயல்பாட்டுக்கு மூலமாக இருக்கும் Software/Source Code பற்றி ஒரு வார்த்தை கூட பேச மறுப்பது ஏன்?
Source Code பற்றிய விவாதம் பெரிதானால் EVM-ல் நடக்கும் எல்லா மோசடிகளும் அம்பலமாகிவிடும் என்று தேர்தல் ஆணையம் பயப்படுகிறதா? சாப்ட்வேர் தொழில் நுட்பம் தெரிந்த லட்சக்கணக்கான பொறியாளர்கள் உள்ள இந்தியாவில் EVM Source Code/Software என தொழில்நுட்பம் சார்ந்த விவாதத்தை முன்னெடுத்தால் மாட்டிக் கொள்வோம் என்று தேர்தல் ஆணையம் அஞ்சி நடுங்குகிறதா?
ஜெர்மனி, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் EVM தடை செய்யப்பட்டதற்கு Source Code விவாதம் முக்கிய காரணம் என்பதால் இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இந்த விவாதத்தை தவிர்க்கிறதா?
என முக்கியமான பல கேள்விகளை கேட்டு நாளை (26.03.24) டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்று மனு அளிக்க உள்ளோம். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் மனு அளிக்க உள்ளோம்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடந்துள்ள EVM முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்க உள்ளோம்.
– மக்கள் உரிமை இயக்கம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!