கட்டுரை

தேர்வுக்குச் செல்லும் கண்மணிகளுக்கு…

80views
 தயானி தாயுமானவன்
பதட்டமடைய எதுவுமில்லை. ஒரு வருட பயிற்சியில் தன்னம்பிக்கையோடு எழுதுங்கள். இரவு முழுதும் விழித்திருந்து படிப்பது உடல்நிலையை பாதிக்கும். இரவு பத்து மணிக்கு தூங்குவதை வழக்கமாகக் கொள்ளவும். காலை 4.30 மணிக்கு எழுந்து படிப்பது நல்ல நினைவாற்றலைத் தரும்.
உணவு விடயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உடல் எதை ஏற்றுக் கொள்ளுமோ அதையே சாப்பிடுங்கள். தாகம் எடுக்கும் போது நீர் அருந்துங்கள். தாகத்தை கட்டுப்படுத்தாதீர்கள்.
சளி பிடிக்காத சூடான உணவுகளை உண்ணவும். இறுக்கமான உடைகளை அணியாது காற்றோட்டமான உடைகளை தேர்வு செய்யவும்.
முக்கியமான வார்த்தைகளை குறிப்பெடுத்து tag போட்டு கையளவு சதுர பக்கங்கள் போதுமானது. ஐந்து மதிப்பெண்கள் Keywords குறிப்பெடுத்து 10 – பக்கங்களில் மொத்த 5 மதிப்பெண்களையும்
அடக்கி விடலாம்.
இரண்டு மதிப்பெண்களுக்கான key – words சூத்திரங்களை 5 – பக்கங்களில் paper cuttings (சதுர பக்கங்களில் அடக்கவும்) நினைவில் வராததை மூன்று முறை எழுதிப்படிக்கவும்.
அமைதியான இடங்களை தேர்வு செய்து அமர்ந்து படிக்கவும் . நண்பர்களுடன் அரட்டை கூடவே கூடாது.
தேர்வு அறைக்குள் போகும் சில நிமிடங்கள் வரை நம்மால் பாடங்களை திருப்புதல் செய்ய முடியும்.
முக்கியமான கணித சமன்பாடுகள் சூத்திரங்களை எழுதிவைத்து கையடக்கமாக திருப்புதல் புத்தகம் முழுமையும் திருப்ப வேண்டாம் கடைசி நேரங்களில் . தன்நம்பிக்கை மிக மிக அவசியம்..மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த நொடி மீண்டும் வராது என்ற நிலையை மனதில் இருத்தவும்.
பதட்டம் இல்லாத நிதானமான மனநிலை அவசியம்.. நாம் தேர்வு எழுதும் மையத்திற்கு ஒரு மணி நேரம் முன்பே செல்வது புது இடம் என்ற பதட்டத்தை தவிர்க்கலாம்.
இரவே தேவையான உடை Transparent பவுச் பென்சில் – 2 கோடு போட அளவுகோல் பேனா வழக்கமாக எழுதிப்பார்ப்பது தேர்வுக்கு முன்பே அவசியம்.
வகுப்பறையில் கடன் வாங்கி கோடு போடுவது போன்ற விடயங்களை தேர்வு அறையில் தவிர்க்கவும். அது நம் மீது வீணான சந்தேகங்களை தவிர்க்க உதவும். நீங்கள் உங்கள் அருகாமையில் எழுதுபவர்களை எக்காரணம் கொண்டும் சலனப்படுத்துதல் கூடாது
தெரிந்த விடைகளை மளமளவென எழுதிவிட வேண்டும். தெரியாத கேள்விகளை ஆராய்ச்சி செய்வது நேரவிரயம் காலவிரயம். இதனால் தெரிந்ததைக்கூட எழுத முடியாத சூழல் உருவாகும்.
கணிதத்தில் எட்டுமதிப்பெண் வினாக்கள் செய்முறை வடிவியல், graph – முதலில் எழுத வேண்டும்..
இது கடைசி நேர பதட்டத்தை தவிர்க்கலாம்.
ஒரு மதிப்பெண் வினாக்களை அடித்து மீண்டும் விடை எழுதுதல் கூடாது. presentation மிக முக்கியம்
ஏதேனும் நீக்க வேண்டுமெனில் ஒயிட்னர் போட்டு அழிக்கக் கூடாது. பென்சிலால் எழுத்தின் மீது மென்மையான சரிவான கோடுகள் போட்டால் போதும். அது விடைத்தாளை திருத்துபவருக்கு மட்டுமே தெரியும்.
தெரியாத வினாக்களில் பார்முலாவை சரியாக எழுதினால் ஒரு மதிப்பெண் கிடைக்கும்.
பெற்றோர்கள் வீட்டில் நல்ல சூழலை ஏற்படுத்தித் தருதல் அவசியம். குழந்தையை தனியே விட்டுவிட்டு வெளியூர் செல்வது கூடாது.
இந்தத் தேர்வுகள் அவர்களின் வாழ்வை சிறப்பாக மாற்றும் திறவுகோல் ஆகும்.
ரெயில், பஸ் எதுவாக இருப்பினும் முன்கூட்டியே தேர்வு மையத்தை அடைந்து விட வேண்டும். இது பதட்டத்தை தவிர்க்க உதவும். தேர்வு நாட்களில் பெற்றோர் இந்த விடயத்தில் தூரத்தை கருத்தில் கொண்டு அவர்களை அழைத்துச் சென்று விடவும் கூட்டி வரவும் ஏற்பாடுகள் செய்வது நல்லது.
குடிநீர் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாது வெந்நீர் ஆறிய பின் தந்தனுப்பவும். வீட்டில் சண்டை சச்சரவுகளை பெற்றோர் தவிர்ப்பது நல்லது.
எப்போதும் நேர்மறையான எண்ணங்களோடு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம். இந்த கடைசி நேரத்தை வீணடிக்காமல் படித்தால் போதுமானது.
உங்கள் மேற்ப்பார்வையாளரை மரியாதையுடன் நடத்தவும். சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை தவிர்க்கவும்.
முடிந்துவிட்ட தேர்வுகளைப் பற்றி கவலைக் கொள்ளாது அடுத்த தேர்வுக்கான திருப்புதலைத் தொடங்குதல் அவசியம். கைபேசியில் நண்பர்களோடு தேர்வுகள் பற்றி பேசுவதை தவிர்க்கவும்.  அது கால விரயமாகும். விட்ட மதிப்பெண்களை அடுத்த தேர்வில் எவ்வாறு எடுப்பது என்பதே முக்கியம். அது மொத்த மதிப்பெண்களை அதிகப்படுத்தும்.
தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் உங்களுக்கு துணை நிற்கட்டும். அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகளும் பேரன்பும்.
வெற்றியே நமது குறிக்கோள். உழைப்பே நமது மூலதனம். வாழ்க மாணவச் செல்வங்கள்.

1 Comment

Leave a Reply to Antony CG Cancel reply

Right Click & View Source is disabled.

error: Content is protected !!