கட்டுரை

உன்னை அறிந்தால்!

229views
உன்னை அறிந்தால்!
என்றும் இல்லாமல் இன்றைய காலத்தில் அதிகமாக பத்திரிக்கைகளில் பேசப்படுவது எது?
– நவீன சித்தர்கள் எழுதும் வாழ்க்கை நெறிகள்.
– நவீன ஆராச்சியாளர்களின் ( மனித) சுய மேம்பாடு.
– நவீன வாத்ஸ்யாயனர்களின் காம சூத்ராக்கள்.
ஏன் இவைகள் இன்று மிகவும் பேசப்படுகின்றன? இவைகள் ஆக்கிரமிக்காத பத்திரிக்கைகளே உலகில் இல எனலாம்.
மனிதன் இன்று தன் திறமையை பிரதானமாக நம்புகிறான். வாழ்க்கை, சம்பாத்தியம், மனித உயர்வு, ஆன்மீகம் எல்லாவற்றிலும் திட மனசித்தமே தன் உயர்வுக்கு வழி என்கிறான். வாழ்க்கையின் சூக்குமத்தை அறிய ஆவல் மிகக்கொள்கிறான்.
ஆங்கிலத்தில் சிறந்த படைப்பாளியான ரோபின் ஷர்மா, தமிழில் எழுதும் நாமறிந்த ஜக்கி வாசுதேவ் மற்றும் பல சிறந்த படைப்பாளிகளின் ஆக்கங்களை நாம் ஆழ்ந்து படிக்கும்போது ஒன்று முக்கியமாய்ப்படுகிறது. அது, தன்னம்பிக்கை, விடா முயற்ச்சி, தன்னால் எதுவும் முடியும் என்ற சிந்தனைகள்தான். மிக நல்ல விஷயம்தான். அத்வைதமும் அதைத்தான் போதிக்கின்றது.
திட மனம் படைத்தவர்கள், எதையும் சாதிக்கவேண்டும் என்பவர்கள் சிறு சிறு தற்காலிக இன்பத்தை பொருட்படுத்த மாட்டார்கள். அவற்றிற்கு அனுசரித்துக் கொடுக்கவும் மாட்டார்கள். எப்பொழுதும் நிறைவை நோக்கியே நடை போடுவார்கள். பாதி கிணறு தாண்டுவது ஆபத்து என்பதை முழுமையாக உணர வேண்டும்.
நான் முதலில் வேலையில் சேர்ந்தபோது என் முதலாளி என்னிடம் கூறினார்: Don’t work hard but work smart.
கடின உடல் உழைப்பின் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் பெற முடியும். அதே சமயம் புத்திசாலித்தனத்தின் மூலம் ( அதிக உடழுழைப்பு இல்லாமலும்) செயல்படும்போது நிறைய சம்பாதிக்கலாம். நல்ல பெயரும் வாங்கலாம்.

பக்கத்தில் ஓடும் ஆற்றில் வாளி வாளியாக தண்ணீர் நிரப்பி தனது தோட்டத்திற்கு ஊற்றலாம். அல்லது தன் சிந்தனையை பயன்படுத்தி ஆற்றிலிருந்து தனது தோட்டத்திற்கு ஒரு பாத்தி கட்டி சுலபமாக தண்ணீர் கொண்டு வரலாம். இன்னும் ஒரு படி மேலே போய் குழாய் இணைப்பின் மூலம் தடையில்லாமல் தேவையான அளவு தண்ணீர் பெறலாம்.
Working smart என்னவென்பதை நீஙகள் சுலபமக விளங்கிக்கொண்டீர்கள்!!!
தன் சிந்தனையை மேம்படுத்தும்போது தனது திறமை வெளிப்படுகிறது. அடுத்தவர்களுக்கு தனது கண்டுபிடிப்பின் திறமையின் மூலம் பயன் கிடைக்கிறது. மரியாதையும் கூடுகிறது.
தன்னை அறியும்போதுதான் தன்னில் உறங்கிக்கிடக்கும் வலிமையை வெளிக்கொணரமுடியும்.
குரு ஒருவர் தன் சீடர் ஒருவரிடம் ஒரு புதிய மண் பானை வாங்கி வருமாறு கூறினார். சீடரும் மிக தூரத்தில் இருக்கும் ஊரின் சந்தைக்குச்சென்று ஒரு புதிய மண் பானை வாங்கி வந்து தண்ணீர் நிரப்பி வைத்தார்.
உச்சிப்பொழுதான நேரத்தில் குரு குடிக்கத்தண்ணீர் கேட்டார். சீடர் பாணையைத்திறந்து பார்த்தபோது அதில் நிரப்பி வைத்த தண்ணீர் இல்லாமல் பானை காலியாக இருந்தது. பானை ஓட்டை.!!!
மிகக்கோப்ப்பட்ட குரு, அந்த சீடரை அந்த உச்சி வெயிலில் அனுப்பி பானையை மாற்றிவரச்சொன்னார். மற்ற சீடர்கள், குருவே, கருணை மிகுந்த தாங்கள் இந்த உச்சி வெயிலில் அவரை அனுப்பி இருக்கிறீர்கள். பாவம் அவர் என மரியாதையாக வினவினார்கள்.
அதற்கு குரு, அறிவு மிக்க சீடர்களே! ஞானம் படிப்பவர்கள் ஏமாளியாக இருக்கக்கூடாது. பொது மக்கள் பானையை சுண்டிப்பார்த்து வாங்கினால் நாம் பானையில் தண்ணீர் ஊற்றிப்பார்த்து வாங்க வேண்டும் என்றார்.
எங்கே நமது சிந்தனைத்திறன்?
இறைவன் கவலையுள்ளவனாக இருந்திருந்தால் இவ்வுலகம் தோன்றியிருக்குமா??. இறைவன் கவலைக்கொண்டு இவ்வுலகைப்படைத்தான் என்றா நினைக்கிறீர்கள்?? அப்படி இல்லை. அவன் தன்னை அறியப்பட நாடியே இவ்வுலகைத்தோற்றுவித்தான்.
அழகான மலைகள், பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்டங்கள், நீண்ட ஆறுகள், உயர்ந்த நீர்வீழ்ச்சிகள், மரங்கள் செடிகள் எல்லாம் அழகுடன் தன்னைச்சந்தோஷமாக வெளிப்படுத்துகின்றன.
இயற்கையைப்பார்த்தால் மனம் எவ்வளவு சந்தோஷம் அடைகிறது!!! ஆனால் மனிதன் மட்டும் கவலையை தன்னுடைய பூர்வீகச்சொத்தாக்கிக்கொள்கிறான். இது மடமை இல்லையா??
ஒரு முறை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன்பு ஒரு காட்டரபி ஒருவர் அழகற்ற நிலையில் அதாவது சரியாக தலை சீவாமல், நல்ல உடை அணியாமல் வந்த போது நபி (ஸல்) அவர்கள் அந்த அரபியை நோக்கி, போய் தலைவாரி ஒழுங்காக வாருங்கள். இறைவன் அழகை விரும்புகிறான் என்றார்கள்.
இறைவனுக்கு ஜமால் என்றும் ஒரு பெயர். ஜமால் என்றால் அழகு என்று பொருள்.
Things never happen the same way twice – ஒரு விஷயம் இரண்டு தடவை ஒரே மாதிரியாக நடக்காது. – இது Narniaவில் Aslan என்ற சிங்கம் பேசும் வசனம்.
எப்பவும் நாம் சந்தோஷமாக இருக்கணும். ஏனென்றால் சில சந்தர்ப்பங்கள் நம் வாழ்க்கையில் திரும்பவும் வராது.
ஆம்.! சந்தோஷங்கள் நம்மைத்தேடி வருவது சில சமயங்களில்தான். எப்பொழுதும் நம் மனதை, சிந்தனையை, சந்தோஷமான நிலைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும்.
நாம் பார்த்து இருக்கிறோம். சிறு பிள்ளைகள் கொட்டும் மழையில் நனைந்துக்கொண்டு தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் மழைமீது கோபப்படுவது இல்லை.
எந்த ஒரு சூழ்னிலையையும் நாம் நமக்குச்சாதகமாக்கிக்கொள்ளவேண்டும்.
நம்மைப்படைத்த இறைவனே கவலை கொள்ளாதபோது நாம் மட்டும் ஏன் கவலையில் தோய்ந்து கிடக்க வேண்டும்???
வாருங்கள், வாழுங்கள், சோம்பலுக்கு விடை கொடுப்போம். தன்னை அறிந்து ஒவ்வொரு வினாடியையும் அனுபவிப்போம்.!
அதிரை எஸ்.ஷர்புத்தீன்
சிறப்பாசிரியர்- ‘நான்’ மின்னிதழ்

1 Comment

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!