தமிழகம்

தோப்புக்குள் புகுந்த யானை. 130 மரங்கள் ஒரே இரவில் சேதமானதால் ரூ. 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி ராமராஜ் கவலை

51views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூரை சேர்ந்த மாரியப்பன், ராமராஜ் சகோதரர்களுக்கு ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோயிலுக்கு பின்புறம் சொந்தமாக 6 ஏக்கர் தோப்பு உள்ளது.
இந்த இடத்தில் தென்னை மரங்கள் மற்றும் ஊடு பயிராக வாழை மரங்களை நட்டு கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் பராமரித்து வருகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் குலை தள்ளி இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இவர்களது தோப்புக்குள் புகுந்த ஒற்றை யானை, குலை தள்ளிய நிலையில் இருந்த 80 வாழை மரங்கள் மற்றும் 50 தென்னங்கன்றுகளை ஒடித்து முற்றிலும் சேதப்படுத்தி உள்ளது.
2 வருடங்களாக நட்டு பராமரித்த 130 மரங்கள் ஒரே இரவில் சேதமானதால் தனக்கு ரூ. 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி ராமராஜ் தெரிவித்தார். சேதமான மரங்களை மீண்டும் நடுவதற்கு மேலும் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும் என விவசாயி தெரிவித்தார்.

அரசு தனக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்குவதுடன், வன விலங்குகள் விளை நிலத்திற்குள் வருவதை தடுக்க அகழி வெட்டி பாதுகாக்கவும் வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!