தமிழகம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 2022 தேர்தல் முடிவுகள் கிறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி மக்கள் உரிமை இயக்கம் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக மக்கள் உரிமை இயக்கம் தலைவர் சிவனடியார் கோபால் மனு

29views
தமிழ்நாட்டில் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் EVM-ல் 173 வேட்பாளர்களுக்கு 0-பூஜ்யம் வாக்கு பதிவானது எப்படி?
தமிழ்நாட்டில் EVM- ல் நடந்துள்ள இந்த மிகப்பெரிய முறைகேடு தொடர்பாக..தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி..தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 – மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட்ட 173 வேட்பாளர்களுக்கு EVM வாக்கு எந்திரத்தில் 0 (பூஜ்யம்) வாக்கு பதிவானது எப்படி?
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் கடந்த 2022-பிப்ரவரியில் தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. EVM வாக்கு எந்திரங்கள் மூலம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இத் தேர்தலை நடத்தியது. இத்தேர்தல் முடிவுகள் மாநில தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் போட்டியிட்ட 173 வேட்பாளர்கள் 0 (பூஜ்யம்) வாக்கு பெற்றுள்ளனர். இதில் 123 வேட்பாளர்கள் பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள். 46 பேர் நகராட்சி வார்டு வேட்பாளர்கள். 4 பேர் மாநகராட்சி வார்டு வேட்பாளர்கள். 0 பூஜ்யம் வாக்குகள் பதிவாகியுள்ள 173 வேட்பாளர்கள் போட்டியிட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளின் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை அளிக்கின்றன
அரியலூர், செங்கல்பட்டு, கோவை, கடலூர், திண்டுக்கல், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, தென்காசி, திருவள்ளூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய 33 மாவட்டங்களில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவ்வாறு 0 வாக்கு பதிவாகியுள்ளது.
இவ்வாறு 0 வாக்கு பதிவாகியுள்ள வேட்பாளர்களில்,
அதிமுக- 3
அமமுக- 34
நாம் தமிழர்- 22
பாமக- 14
தேமுதிக- 8
பாஜக- 6
காங்கிரஸ்- 2
மநீம- 2
சமக- 2
மதிமுக- 1
CPI(M)- 1
CPI(ML) Liberation- 1
ஆகிய அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் 96 பேர். இவர்கள் தவிர 77 சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 0 பூஜ்யம் வாக்கு பதிவாகியுள்ளது.
இவ்வாறு வேட்பாளர்களுக்கு EVM எந்திரத்தில் 0 வாக்கு பதிவாகியுள்ளதன் காரணமாக கீழ்க்கண்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
வேட்பாளர்களுக்கு 0 வாக்கு பதிவாகியுள்ளது எப்படி? இந்த வேட்பாளர்கள் தங்கள் ஓட்டை தங்களுக்கு போட்டிருக்க மாட்டார்களா? இவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், இவர்கள் சார்ந்த கட்சியினர் இந்த வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டிருக்க மாட்டார்களா? இந்த ஓட்டுகள் எல்லாம் மாயமானது எப்படி? இப்படி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன.

நாடு முழுவதும் EVM வாக்கு எந்திரத்தில் மோசடி நடைபெறுவதாக வலுவான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. EVM எந்திரத்தின் Source Code-ஐ பயன்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக EVM-ல் வாக்குகள் திருடப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 173 வேட்பாளர்கள் 2022 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 0 பூஜ்யம் வாக்கு பெற்றுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இத்தேர்தலில் EVM-ல் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு இவை வலுவான ஆதாரங்களாக உள்ளன.
எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இது தொடர்பான விளக்கத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!