தமிழகம்

மதுரையில் வீட்டில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

1.01Kviews
மருத்துவம் படிக்காமல் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த சம்மட்டி புரம் பகுதியை சேர்ந்த யோக சரஸ்வதி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ படிப்பு படிக்காமல் போலியாக டாக்டர் எனக்கூறி வீட்டில் வைத்து கடந்த பல மாதங்களாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ், பார்மசிஸ்ட் பால செந்தில் ஆகியோர் சென்று பார்த்ததில் யோக சரஸ்வதி போலியாக மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டு யோக சரஸ்வதி கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோட்டில் மருதுபாண்டியன் நகர் என்ற பகுதியில் நமது கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபருக்கு ரகசிய தகவலின் பெயரில் போலி மருத்துவர் குறித்து தற்பொழுது மருத்துவ இணை இயக்குனராக இருக்கும் மருத்துவர் செல்வராஜ் அவரிடம் போலி மருத்துவர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது ரகசியமாக கண்காணித்து அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு போலி மருத்துவர் என உறுதி செய்து கைது செய்த பெரும் உதவியாக இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ் கூறுகையில் இது போன்ற போலி மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் மேலும் இதுபோன்று தொடர் நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!