தமிழகம்

நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை மீறி சமூக ஒற்றுமைய சீர்குலைக்க RSS தீவிரவாத அமைப்பு என்று மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்துவதால் MP பதவியை நாடாளுமன்ற சபாநாயகர் பறிக்க வேண்டும். திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். -முன்னாள் நீதிபதியும் மத்திய அரசின் சட்ட நிலைக்குழு உறுப்பினரான டாக்டர் ராமசாமி பேட்டி

68views
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த சில மாதங்களாக ஆர் எஸ் எஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு என பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.
*”மனு ஸ்மிருதி என்ற நூலில் ஆர் எஸ் எஸ் என்பது இந்துத்துவா என்கிற சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு.”* என்றும் எழுதியுள்ளார். இது குறித்து பாரதிய ஜனதா கட்சி சட்ட நிலைக்குழு உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான டாக்டர் ராமசாமி திருமாவளவன் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று அவனியாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:
மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இறையாமை மேல் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு பேசுவது தவறு.  அவர் பேசியதற்கு கண்டணம் தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் 06.11.2022 தேதி பாஜக சார்பில் புகார் அளித்தோம் அதற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் சென்னையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் (MP… MLAs Spl Court) சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறைக்கு திருமாவளவன் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நோட்டீஸ் அனுப்பிய பிறகு இன்றைக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில் திருமாவளவன் பேசியது மற்றும் மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு அவர் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த பிறகு உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன். ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த பாரத பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளா என கேள்வி எழுப்பியவர்.?
திருமாவளவன் இந்திய அரசியலமைப்பு சட்டதிட்டத்தின்படி மதவிரோதத்தை தூண்டும் வகையில் தவறு செய்துள்ளார். மக்களின் ஒற்றுமைக்கும் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சுமோட்டோ வழக்க பதிவு செய்து அவரை கைது செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற சிறப்பு என்னவென்றால் நாட்டு மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், ஜாதி, மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது குற்றம் 153A, 153B, 295A, 505 IBC படி அவரை கைது செய்யவேண்டும். இதனால் 24 மணி நேரத்தில் தொல் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என சட்ட நிலை குழு உறுப்பினர் ராமசாமி கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!