தமிழகம்

பள்ளிக்குள் புகுந்த மழை நீர் . வடிகால் சாக்கடை அமைக்க கோரிக்கை

109views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. அப்போது 18 வது வார்டில் தனியார் உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.
நேற்று பெய்த கனமழை காரணமாக தெருக்களில் உள்ள மழை நீர் அனைத்தும் சாக்கடை கால்வாயில் விழுந்து கால்வாய் நிரம்பி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் சென்றது.
அப்பள்ளியின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள சாக்கடை மிகவும் தாழ்வாக இருப்பதால் சாக்கடை நீர் நிரம்பி பள்ளிக்குள் செல்வதால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக நிலையில் உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சாக்கடையின் அளவை உயர்த்தவும் மழை நீர் கால்வாய் வழியாக பள்ளிக்குள் செல்லாதவாறு வடிகால் சாக்கடை அமைக்கவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் மாணவர்களின் சுகாதாரம் பேணி பாதுகாக்கப்படும்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!