தமிழகம்

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் முக்கிய கோரிக்கை

146views
தென்காசி மாவட்ட புதிய உதயம் அனைத்து மாற்றுதிறனாளிகள் சங்கம், டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கிராம உதவியாளர் பணியில் மாற்றுதிறனாளிகளுக்கு 4% வழங்குதல், இலவச வீட்டுமனை பட்டா குறித்து கடிதம் வந்தும் வழங்கப்படாத தகுதி உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு விரைந்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் புதிய உதயம் சங்கத்தின் மாநில துணை செயளாளர் சேக் முகம்மது,.மாவட்ட பொருளாளர் இஸ்ரேல் தாமஸ், மாவட்ட இணை செயலாளர் ராம் சுந்தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், மூக்காண்டி, ஜெகநாதன், கடையநல்லூர் நகர தலைவர் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!