தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

159views
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் யூனியன் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமையில் தென்காசி யூனியன் அலுவலகத்தில் நடந்தது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை, மூன்று சக்கர சைக்கிள், வீல் சேர், செயற்கை கால், கேலிப்பர், ஊன்றுகோல் கைக்கடிகாரம், இலவச செல்போன், இலவச வீட்டுமனை உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் மாற்றுத் திறனாளிகளிடம் இலவச வீட்டு மனைக்கான மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் புதிய அடையாள அட்டைகளை தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். இதில் தென்காசி யூனியன் ஆணையர், யூனியன் துணை சேர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் புதிய உதயம் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளான மாநில துணை பொதுச் செயலாளர் சேக் முகம்மது, மாவட்ட தலைவர் தென்காசி சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் இஸ்ரேல் தாமஸ், மாவட்ட பொருளாளர் இலியாஸ் மைதீன், மாவட்ட துணைத் தலைவர் வீரபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் ராம் சுந்தர், செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், மூக்காண்டி, சங்கரலிங்கபுரம் கருப்பசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அருணா, கடையநல்லூர் கிளை தலைவர் இப்ராஹிம், அச்சன்புதூர் துணைத் தலைவர் இசக்கி, வேலாயுதபுரம் கிளை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிக்கு தேவையான உதவிகளை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் செய்தனர். சிறப்பாக முகாம் ஏற்பாடு செய்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு புதியம் உதயம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாள் நலத்திட்ட முகாம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்தது.
தென்காசி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள், மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, மூன்று சக்கர சைக்கிள், வீல் சேர், செயற்கை கால், கேலிப்பர், ஊன்று கோல், கைக்கடிகாரம் udid card, ரயில் பாஸ், பஸ் பாஸ் இலவச செல்போன், இலவச வீட்டு மனை பட்டா இன்னும் பல மாற்றத்திற்கான தேவையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் புதிய உதயம் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் சேவையாற்றினர். முகாமில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிர்மலா, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அருணா, கடையநல்லூர் கிளை தலைவர் இப்ராஹிம், புளிச்சிகுளம் கிளை செயளாளர் குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் புதிய உதயம் சங்க நிர்வாகிகளை பாராட்டினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!