தமிழகம்

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்.

195views
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து இன்று காலை திடீரென காலமானார்.
தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர் மாரிமுத்து.
இதையடுத்து பரியேறும் பெருமாள் முதல் ஜெயிலர் வரை ஏராளமான படங்களில் குணச்சித்திர நடிகராக கலக்கி வந்த மாரிமுத்து, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!