தமிழகம்

மாண்டஸ் புயல் எதிரொலி நள்ளிரவு சூறாவளி: பாம்பன், மண்டபம் கடற்பகுதிகளில் விசைப்படகுகள் சேதம்

33views
மாண்டஸ் புயல் எதிரொலியாக நள்ளிரவு வீசிய சூறைக்காற்றால் பாம்பன், மண்டபம் கடற்பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கின.  வங்ககடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், ராமேஸ்வரம் கடற்பகுதிகளில் நேற்றிரவு வீசிய சூறைக்காற்றால் பாம்பன் தென் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தியிருந்த 10க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கின.
சேதமான படகுகளை சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் முறையாக நங்கூரமிடாமல் நிறுத்தியிருந்த பாம்பன் சேசு சூசை என்பவரது விசைப்படகு சேதமாகி கரை ஒதுங்கியது. பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 2 ஆம் எண் கூண்டு 2வது நாளாக ஏற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1,500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நான்காவது நாளாக தொழிலுக்கு செல்லவில்லை.  சுமார் 60 ஆண்டு பழமை வாய்ந்த ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த தூண்டில் வளைவு உடன் கூடிய துறைமுகம் அமைத்து தர வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!