தமிழகம்

கரையைக் கடக்க காத்திருக்கும் மாண்டஸ் புயல்

76views
தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்ககடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7-ம் தேதி மாண்டஸ் புயலாக உருவெடுத்து, இன்று சென்னை தென்கிழக்கு பகுதியில் 320 கி.மீ.தொலைவில் நிலைகொண்டு 15 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டு உள்ளது.
இன்று நள்ளிரவு இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி-ஸ்ரீ ஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சுமார் 85 கி.மீ வேகத்தில் சூறாவளிகாற்று வீசக்கூடும் என்றும் ஆய்வு மையம் கணித்து உள்ளது.
9,10,11 -ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். 12-ம் தேதி சில இடங்களில் மிதமான அல்லது லேசான மழை பெய்யக்கூடும்.  சென்னை, திருவள்ளுவர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆங்காங்கே தற்போது விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.  அதேப்போல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தற்போது மழை பெய்துவருகிறது.
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அரக்கோணத்திலிருந்து பேரீடர் மீட்பு படை சென்று உள்ளது. ஏற்கனவே 22 மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களும் மற்றும் விளையாட்டு திடல்கள் இன்று முதல் மூடப்படும். அதேப்போல்காற்று வீசும்போது 2 மணிநேரம் மின்தடை ஏற்படுத்தப்படும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூவர், கடலூர், விழுப்புரம், மாவட்டத்தில் இரவு பஸ் நிறுத்தப்படும். ஆனால் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மத்தியம் புழல் மற்றும் செம்பரபாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வினாடிக்கு 100 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது.

தற்போதையை நிலப்பரப்படி செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தரன் கூறும்போது பகல் 1 மணி நிலப்படி சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீட்டர் தொலைவிலும் காரைக்காலிருந்து 140 கி.மீட்டர் தொலையில் நிலைகொண்டு உள்ளது. நள்ளிரவு முதல் விடியற்காலை வரை சுமார் 85 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிகாற்று வீசும்.
கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகளும் மற்ற மாவட்டங்களில் வருவாய்துறை தகுந்த நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
கடைசி செய்தியாக புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் அனைத்து பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!