தமிழகம்

மத்திய பிரதேஷ் மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நட்டாராம் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா மால்மியா சைக்கிள் பயணம்

92views
மத்திய பிரதேஷ் மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நட்டாராம் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா மால்மியா என்கிற 24வயது தேசிய மழையற்ற வீராங்கனை இந்தியா முழுவதும் தனி ஒரு பெண்ணாக இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை வலியுறுத்த சைக்கிள் பயணம் செய்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் அவரது சொந்த மாநிலமான மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தியாவில்தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட தினத்தன்று தனது பயணத்தை துவங்கிய ஆஷா மால்மியா குஜராத் மகாராஷ்டிரா கோவா கர்நாடகா கேரளா உட்பட ஏழு மாநிலங்களைக் தனி ஒரு பெண்ணாக யாருடைய துணையும் இன்றி கடந்து இன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வந்தடைந்தார்.
இவரது உயரிய எண்ணத்தை அறிந்து அவரை பாராட்டும் விதமாகவும் ஆதரிக்கும் நோக்கில் ராஜபாளையம் வருகை தந்த ஆஷா மால்மியாவை ராஜபாளையம் டிஎஸ்பி ப்ரீத்தி வரவேற்று உபசரித்து தனது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்தார்.
மேலும் தான் கடந்து வந்த பாதைகள் குறித்து ஆஷா மால்மியா கூறியதாவது.  எனது நாடு பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதை வலியுறுத்தது இந்த அறிய முயற்சி எடுத்துள்ளதாகவும்,
நான் கடந்து வந்த பாதைகளில் பல்வேறு மாவட்டங்களைச் ஐஏஎஸ் அதிகாரிகள் காவல் துறையினர்.வருவாய்த் துறையினர் பொதுமக்கள் உட்பட பலதரப்பட்ட மக்களும் என்னை நன்கு வரவேற்று உபசரித்து ஆதரவு தெரிவித்து வருவது இந்தியா பாதுகாப்பான நாடு தான் என்பதை உறுதி செய்வதாகவும்,
எனது பயணத்தின் இறுதியில் எனது தாய் நாட்டை பற்றி தவறாக எண்ணியவர்களுக்கு என் மூலம் தகுந்த பதில் அளிக்கப்படும் எனவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறினார்.
மேலும் இவரை வரவேற்று ஆதரவுகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த டிஎஸ்பி ப்ரீத்தி வாழ்த்துக்கள் கூறி வழிய அனுப்பி வைத்தார்.
மதுரை வழியாக தமிழகத்தை கடந்துஓசூர் கர்நாடகா வழியாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆஷாமால்மியா தனது பயணத்தை தொடர்ந்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!