தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் 12 லட்சம் மதிப்புமிக்க தொலைந்து போன செல்போன்கள் மீட்பு

113views
தென்காசி மாவட்டத்தில் ரூபாய் 12 லட்சம் மதிப்புடைய தொலைந்து போன 75 செல்போன்களை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அதன் உரிமையாளர்கள் புகார் கொடுத்திருந்தனர். இந்த புகாரின் பேரில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் படி சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி, மேலும் காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் அடங்கிய காவல் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தொலைந்த மற்றும் தவறவிட்ட ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டது. மேற்படி மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் 19.12.2022 அன்று தென்காசியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். மேலும் செல்போன்கள் தவறவிட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை அணுக வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!