72views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜகாபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பெரிய கருப்பன் இவருடைய பசுமாடு இதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவருடைய கிணறு அருகில் மேய்ந்து கொண்டிருந்தது.அப்போது பசுமாடு எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உசிலம்பட்டி தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று சுமார் 30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி மீட்டு உரிமையாளர் இடம் மாட்டை உயிருடன் ஒப்படைத்தனர்.






