தமிழகம்

கவுன்சிலர்களுக்கு புத்தக பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

349views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் யூனியன் அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கான புத்தகப் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, டிகல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருக்கும் கவுன்சிலர்களுக்கு மாநில முதன்மை பயிற்சியாளர் மீனம்பாள் மாவட்ட முதன்மை பேச்சாளர் தங்கம் ஆகியோர் பயிற்சிகள் அளித்தனர் .
இதில் யூனியன் சேர்மன் ரஞ்சனி சுதந்திரம் ,துணை சேர்மன் மலேசியா பாண்டி முன்னிலையில் நடைபெற்றது .இதில் கவுன்சிலர்களுக்கு வார்டு பகுதியில் இருக்கும் பொதுமக்கள் குறைகள் நிறைகளை பற்றி விளக்கமாக எழுதி மாதம் ஒருமுறை நடைபெறும் கவுன்சிலர் கூட்டத்தில் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதில் அனைத்து பகுதி கவுன்சிலர்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!