தமிழகம்

கூட்டுறவு வார விழா போட்டி மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டு 

151views
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ராமநாதபுரத்தில் 69 வது கூட்டுறவு வார விழாவையொட்டி மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடந்தன. கட்டுரைப்போட்டி இடை நிலை பிரிவில் சித்தார் கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி மு.ஹஃபீசா முஸ்ஃபிரா முதலிடம், பேச்சுப்போட்டி இடைநிலை பிரிவில் ஆறாம் வகுப்பு மாணவி அ.அஜ்ருன் ராபியா இரண்டாம் இடம், பேச்சுப்போட்டி உயர், மேல்நிலை பிரிவில் பிளஸ் 2 மாணவி செ. ஷகிதா ஷிபானா இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற முகமதியா மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ராம கருமாணிக்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் உ. திசைவீரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா ஆகியோர் பரிசு வழங்கி சிறப்பித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், வழிகாட்டிய தமிழாசிரியர் செய்யது இப்ராகிம் ஆகியோருக்கு முகமதியா பள்ளிகளின் தாளாளர் ஹாஜா மொய்னுதீன், முகமதியா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் அலி பாராட்டினர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!