தமிழகம்

நெல்லை ம.சு.பல்கலை கழகத்தில் நடைபெற்ற நுகர்வோர் கருத்தரங்கு; பங்கேற்ற மாணவ மாணவிகளை பாராட்டி சான்றுகள்; கவிஞர் பேரா வழங்கினார்

52views
திருநெல்வேலி மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பொதிகை அறக்கட்டளை முன்னெடுப்பில் நுகர்வோர் கருத்தரங்கம் மற்றும் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. “நுகர்வோர் உரிமைகளும் கடமைகளும்” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நெல்லை பொதிகை அறக்கட்டளை நிறுவுநர் கவிஞர் பேரா கலந்து மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வணிகவியல் துறை, நெல்லை பொதிகைத் தமிழ் அறக்கட்டளை, மற்றும் மின்னல் அறக்கட்டளை சார்பில் நுகர்வோர் கருத்தரங்கம் மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது. பல்கலைக் கழகத்தின் பதிவாளர் முனைவர் கு.அண்ணாத்துரை தலைமையுரை வழங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் பா.ரேவதி வரவேற்புரை ஆற்றினார்.

மின்னல் அறக்கட்டளை நிறுவுநர் எஸ். மில்லத் இஸ்மாயில், திருக்குறள் இரா.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆஃப் கன்னியாகுமரி என்ற அமைப்பின் உறுப்பினர் முனைவர் கீதா பேசினார். தொடர்ந்து நுகர்வோர் சட்ட சிறப்புகள் குறித்து மூத்த வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர் பேசினார். நுகர்வோர் உரிமைகளும் கடமைகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் பரிசுக்கு செல்வி பா. மகாராசி வந்தனா, இரண்டாம் பரிசுக்கு செல்வன் மு.விஜய ஆனந்த், மூன்றாம் பரிசுக்கு செல்வி இரா.முத்து சுந்தரி என்ற மாணவியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வான நபர்களுக்கு பதிவாளர் முனைவர் கு.அண்ணாத்துரை பரிசுகளை வழங்கினார். கருத்தரங்கில் பங்கேற்க அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களை பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவுநர் கவிஞர் பே.இராஜேந்திரன், மின்னல் அறக்கட்டளை நிறுவுநர் எஸ்.மில்லத் இஸ்மாயில் ஆகியோர் வழங்கினர். நிறைவாக பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவுநர் கவிஞர் பே.இராஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்களும், மாணவிகளும் திரளாக கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!