தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுவதை தடுக்க தூர்ந்து போன அகலிகளை சீரமைத்து பண விதைகளை வனத்துறையினர் நடவு செய்ய வேண்டும் என வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாமில் வனத்துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை.

92views
தேனி மாவட்டம் அதனை அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விளைநிலங்களில் காட்டு மாடு, மான், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் புகுவதால் விவசாய விளைபொருட்கள் பெரிதும் சேதப்படுத்தி வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும், சிறுத்தை போன்ற மிருகங்கள் விளைநிலங்களில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை தொடர்ந்து தாக்கி கொன்று வருவது உள்ளிட்ட பிரச்சனைகளால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைவதாக தொடர்ந்து விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் விளைநிலங்களை சுற்றி சோலார் மின்வெளிகளை அமைத்து விவசாய விலை பொருட்களை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையின் சார்பில் மின்வெளிகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் கொடைக்கானல் வன கோட்ட வன பாதுகாவலர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பெரியகுளம் பகுதி விவசாயிகள் கூறுகையில் ஏற்கனவே வனவிலங்குகள் விளைநிலங்களில் புகுவதை தடுக்க வனத்துறையினர் அகழிகள் வெட்டி நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அது எந்த வகையிலும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அதை கட்டுப்படுத்த வனத்துறையினர் அகலிகளை மீண்டும் அகலப்படுத்தி அதன் கறைகளில் பனை விதைகளை நடவு செய்து பனை மரங்கள் வளர்க்கப்பட்டால் மட்டுமே வனவிலங்குகள் விலை நிலங்களில் புகுவதை தடுக்க முடியும் எனவும், விவசாய விளைநிலங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளை தாக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!