தமிழகம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம்

288views
தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ் ஒப்பிலக்கியக் கழகம் ஆகிய இணைந்து நடத்திய ‘தமிழ் கன்னட உறவுகள்’ சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் சொற்பொழிவு  கடந்த 17.03.2026 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் குழு உறுப்பினர் மருத்துவர் முனைவர் பெ. பாரதஜோதி தலைமை தாங்கினார்.பதி வாளர் (பொ.) கோ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசியதாவது திராவிட மொழிகளில் சிறப்பாகத் தமிழும் கன்னடமும் ஒன்றோடொன்று தொடர்புடையன. பழங்கன்னடத்திற்கும் தமிழுக்கும் புவியியல், வர்த்தகம், கலாச்சாரத் தொடர்புகள் ஏராளம். சமாளித்தல், சொத்து, பட்டாகத்தி ஆகிய சொற்கள் தமிழுக்குக் கன்னடம் வழங்கிய கொடைகள் எனக் குறிப்பிட்டார்.

சிறப்பு அழைப்பாளராக துறையூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதல்வர் முனைவர் மு.அருணாசலம் “ஒப்பீட்டுப் பார்வையில் கடைசி கிராக்கியும் ஆண்களின் படித்துறையும்” எனும் பொருண்மையில் கூறியதாவது கடைசி கிராக்கி, ஆண்களின் படித்துறை என்ற இரண்டு சிறுகதைகளையும் ஒப்பிட்டு அச்சிறுகதைகளில் பெண்ணியம் சார்ந்த குறியீடு, குறியீடு, தொன்மம், துன்பியல் படிமம் சார்ந்த செய்திகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகம், கன்னட மொழித்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் மா. ரங்கசுவாமி, “தமிழ் கன்னட இலக்கிய மொழித் தொடர்புகள்” எனும் பொருண்மையில், இலக்கியங்களில் தமிழ் கன்னட உறவுகள் எவ்வாறு உள்ளன என்பதைப் பற்றி எடுத்துரைத்தார்.
பிற்பகல் 02.30 மணியளவில் மதுரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, தமிழ் உயராய்வு மையம், உதவிப்பேராசிரியர், முனைவர் சே.முனியசாமி “தமிழ், கன்னடம் அற இலக்கியஉறவு” எனும் பொருண்மையில் உரையில் அதில், கவிராஜமார்க்கம், வட்டாரதானை,சம்பு இலக்கியம், பம்பாபாரதம்போன்ற அற இலக்கியங்கள் பற்றியும் அவற்றிலுள்ள அறச்சிந்தனைகள் பற்றியும் எடுத்துரைத்தார். இவரைத் தொடர்ந்து கோயம்புத்தூர் பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் ஆ.ஈஸ்வரன் அவர்கள் “கர்நாடகா பாஷா பூஷணமும் தமிழ் மொழிபெயர்ப்பும்” எனும் பொருண்மையில் உரை வழங்கினார். முன்னதாக இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ச.கவிதா ஒருங்கிணைத்து வரவேற்றார். இணைப் பேராசிரியர் முனைவர் இரா.வெங்கடேசன் நன்றி கூறினார். முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ந. நதியா செ.பிரபாகர் ஆகியோர் இணைப்புரை வழங்கினார். இதில் பேராசிரியர் பெருமக்கள் அலுவல்நிலைப் பணியாளர்கள் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!