தமிழகம்

வேலூர் விஐடி ரிவேரா – 2026 .23-ம் ஆண்டு கலைநிகழ்ச்சியின் பதாகை மற்றும் டி சர்ட்களை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியீடு 4 நாட்கள் விழா கோலாகலம்

75views
வேலூர் விஐடி(VIT) பல்கலைக்கழகத்தில் ரிவேரா – 2026 கலைநிகழ்ச்சி இன்று 26-ம் தேதி துவங்குகிறது. மார்ச் 1-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.இது குறித்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிவேரா கலைவிழா இந்த ஆண்டு 23-வது ஆண்டாக கொண்டாடப்படுகிறது. ப்ரீ-ரிவேரா நிகழ்ச்சிகள் பிப், 3 முதல் 22 வரை நடைபெற்றது.
நாளை 26-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் அதாவது மார்ச் 1-ம் தேதி முடிகிறது. இதில் 136 முதன்மை நிகழ்வுகளும்16 பிரிமியம் நிகழ்வுகளும் நடைபெறும். விளையாட்டு போட்டிகள் தனி அதில் 1000-க்கும் மேற்பட்ட வெளிமாநில மாணவர்கள் பங்கேற்பார்கள், மொத்தம்18 ஆயிரத்து மேற்பட்டோர் பல்வேறு பயிலரங்கிகளில் போட்டி நடக்கும்.ரூ25 லட்சம் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலிராஜ், ரிவேரா 26-ன் துவக்கவிழா விருந்தினராக பங்கேற்பார்.
பிரபல பின்னணி பாடகி சுனிதி சவுகான், இசை அமைப்பார் தமன், பின்னணி பாடகர் பிரதீப்குமார், நிறைவு நிகழ்ச்சியில் நடிகை ஜெனிலியா தேஷ்முக் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறினார்.  பேட்டியின்போது விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பெண்டா ரெட்டி, ரமணி பாலசுந்தரம், உதவி துணைத் தலைவர்கள் காதம்பரி விசுவநாதன், இணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, ரிவேரா – 26..ஒருங்கிணைப்பாளர் பெல்வின் எட்வர்ட் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!