தமிழகம்

போதைப்பெருள் பயன்படுத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

213views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி, 11.08.2025 அன்று போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாண்புமிகு துணைமுதல்மைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உறுதிமொழி வாசிக்க கல்லூரி மாணவ-மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் உறுதிமொழி வாசிக்க சுமார் 1400 மாணவ-மாணவியர் மற்றும் 200 பேராசிரியர்கள் போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தேசிய மாணவர் படை செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!