தமிழகம்

கணிதவியல் மன்ற துவக்கவிழா

122views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, கணிதவியல் துறை மற்றும் கல்லூரி உள் தர மதிப்பீட்டு செல் இணைந்து கணிதவியல் மன்ற துவக்கவிழா 25.07.2025 அன்று நடைபெற்றது. துறைத்தலைவர் முத்துசாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். இணைப்பேராசிரியர் ஜாஹிர் ஹுசைன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி, அழகப்பா அரசு கல்லூரி, கணிதவியல் இணைப்பேராசிரியர்கள் அர்ஜுனன் மற்றும் சாத்தப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கணிதவியல் மன்றத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினர். நிகழ்வில் இளங்கலை மற்றும் முதுகலை கணிதவியல் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியை பாத்திமா கனி நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!