தமிழகம்

வேலூரில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கருணாநிதி சிலை, அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்

242views
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அர்ப்பணிக்க தமிழக முதல்வர் நாளை 25-ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு முற்பகல் 12.45 மணியளவில் காட்பாடி ரெயில்நிலையம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு வேலூரில் ரூ.183 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையை திறந்துவைக்கிறார். காணொலி மூலம் சேர்க்காடு அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதியதாக கட்டப்பட்ட காட்பாடி சப் -ரிஜிஸ்தார் அலுவலகத்தை திறந்துவைக்கிறார். அரசினர் தங்கும் முதல்வர், மாலை 5 மணிக்கு அணைக்கட்டு அடுத்த செங்கநல்லூரில் முன்னாள் முதல்வர் கருணநிதி சிலை, கருணாநிதி அறிவாலய கட்டிடத்தை திறந்துவைக்கிறார். அதன்பிறகு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சாலை மார்கமாக செல்கிறார்.
காட்பாடி ரயில்நிலையம் முதல் வேலூர் வரை திமுகவினர் வரவேற்பு கொடுக்கின்றன. அமைச்சர்கள், ஆட்சியர், அலுவலர்கள், கட்சியினர் இதில் பங்கேற்கின்றனர். பலத்த பாதுகாப்பை காவல்துறையினர் செய்துவருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!