சினிமா

திரை விமர்சகர் சத்யேந்திரா காலமானார்

65views
பெங்களூரை பிறப்பிடமாக கொண்ட சத்தியேந்திரா கடந்த 40 ஆண்டு காலமாக சென்னை கோடம்பாக்கத்து திரைக்கலைஞராக வலம் வந்தவர்.
ஏழாவது மனிதன், மண்வாசனை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு உட்பட 20க்கும் மேற்பட்ட தமிழ் கன்னட திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றி இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
எடிட்டர் லெனின் இயக்கி தேசிய விருதினை பெற்ற ‘நாக் அவுட்’ குறும்படத்தில் இறந்து கிடக்கும் குத்துசண்டை வீரனாக நடித்திருப்பார். இந்த காட்சி மூலம் திரையுலகில் பரவலாக அறியப்பட்டார்.
கோவா, திருவனந்தபுரம் நடைப்பெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டவர். பல மொழிகள் பேச தெரிந்த இவருக்கு சினிமாவில் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன் நடிகர் விஜய் அடித்த ‘லியோ’ திரைப்படத்தின் விமர்சனம் மூலம் கவனிக்கப்பட்டவர். ஒரு சில யூ-டியூப்களில் இவரது விமர்சனமும், நேர்காணலும் இடம் பெற்று இருக்கிறது. சினிமா, கலை, மொழி சாந்த விடயங்களில் தனித்துவம் மிக்கவராக பார்க்கப்பட்டார்.
உடல் நலமில்லாமல் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலமானார். சத்தியேந்திராவிற்கு திருமணம் ஆகவில்லை. உறவினர்கள் பெங்களூரில் இருப்பதாக தகவல்.
இவரின் மரணத்திற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!