சினிமா

பாடலாசிரியர் கவிஞர் கருணாகரன் எழுதி திரைப்பட நடிகர் ஆர்யா வெளியிட சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆகிவரும் ‘வேணாம் நண்பா போதை’ பாடல்

72views
வேணாம் நண்பா போதை – இந்த விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளத்தில் இன்று டிரென்டிங் ஆகி வருகிறது.
திரைப்பட நடிகர் ஆர்யா இந்த ஆல்பத்தை 13ம் தேதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு வெளியிட்டார்.
இந்த இசை ஆல்பத்தை திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் லிரிக்ஸ் பாக்டரி மற்றும் Dr.தீரஜ் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பாடலை எழுதி இசையமைத்து பாடி இருக்கிறார் கவிஞர் கருணாகரன். இசை ஒருங்கிணைப்பு : சதிஷ் நாதன்.
‘போதையால் இன்றைய சமுதாயம் எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு கவிஞாக என்னால் முடிந்த ஒரு செயல் இந்த பாடல்’ என்கிறார் கவிஞர் கருணாகரன்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!