சினிமா

வாக்களிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘மாற்றம்’

105views
வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் ‘மாற்றம்’. வாக்களிப்பதன் அவசியம் என்ன, நாம் போடும் ஒரு ஓட்டு தேர்தலில் என்ன மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும் என்பதை காட்சிகள் வழியாக புரியவைத்திருக்கும் இந்த படம் இன்றைய தலைமுறையை மையப்படுத்தி வந்திருக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் இது போன்ற ஒரு மாற்றம் நிகழ்ந்தால் 100 சதவீத ஓட்டு சாத்தியம். ஜனநாயக கடமையை நாம் சரிவர பின்பற்றவேண்டும் என்பதை மிக நேர்த்தியாக விளக்கி இருக்கிறது இந்த குறும்படம்.
தாரணி, பிரசாத், RJ நாகா, S மகாலிங்கம் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
BRIO Pictures க்காக சுதா சுகுமார் சுகுமார் மற்றும் பாலகிருஷ்ணன் தயாரித்து இருக்கின்றனர். ஒளிப்பதிவு : ஆதித்யா, படத்தொகுப்பு : NK சித்ரேஸ்வரன், இசை : ஜெயப்ரகாஷ், எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் விஸ்வநாதன்.
ஒரு சிறிய மாற்றம் வீட்டையும் நாட்டையும் மாற்றும் என்ற கருத்தை தாங்கி வந்திருக்கிறது இந்த ‘மாற்றம்’ குறும்படம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!