சினிமா

புதுச்சேரி இளைஞர்களால் பாவக்கூத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை மூன்றாம் தயாரிப்பில் வெளியிடுகிறது

247views
இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார் இவர் எப்புரா என்கிற முழு நீள காமெடி திரைப்படத்தை உருவாக்கி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார் இந்தி மற்றும் மலையாள மொழியிலும் டப்பிங் ஆகியுள்ளது எப்புரா திரைப்படம்.
மற்றும் சேயோன் பிரான்சிஸ் அத்தியாயம் ஒன்று ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் செய்திருக்கிறார்.
பாவக்கூத்து திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் செல்வராஜ் நடித்துள்ளார் இவர் “நெடுமி” , தமிழினி, என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மற்றும் சிறப்பு கதாபாத்திரமாக விஜய் முருகன் நடித்துள்ளார், கதாநாயகியாக ரஞ்சான தியாகராஜன், காமெடியனாக காத்து கருப்பு கலை முக்கிய கதாபாத்திரத்தில் சீரில் சாகா ஜானி, சரஸ்வதி ரமேஷ் , கார்த்திக் சிவா’ கலைமாமணி நந்தகோபால் தேசிய விருது பெற்ற விஜி @ வீரம்மாள் மற்றும் திருமேனி அழகன், திவ்யா, யுவதி ராயப்பன், பாண்டிச்சேரி சரவணன், RK சுரேஷ் , ஆகியோர் நடித்துள்ளார்கள்..
இவர்களுடன் கண்ணன், அப்துல்ஹமீது,அப்துல் ஷெரிப், திவாகர், திவ்யா,யுவைஸ் முகமது, ரித்திகா, குழந்தை நட்சத்திரமாக கனிஷ்கா, ஆகியோர் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியுள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் புதுச்சேரியில் 10 நாட்களில் எடுக்கப்பட்டுள்ளது. ‘பாவக்கூத்து’ படத்திற்கு ‘RP ஜகன் -ராம்ஜி’ இசையமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளராக ‘ஆல்ட்ரின் மெக்கடோ நிக்சன்’ பணியாற்றி இருக்கிறார். படத்தொகுப்பு ராஜ் கணேஷ் மற்றும் விளம்பர வடிவமைப்பு தீரன்,வண்ணக்கலவை ‘கர்சிவ் ரெக்கார்ட்ஸ்’ ஓளிப்பதிவு மற்றும் சிறப்பு சப்தம் ‘ விக்கி’,.
5.1ஆடியோ மிக்சிங் “செல்வராகேஷ்”, புரொடக்ஷன் மேனேஜர் செல்வம், பிரசன்னா மற்றும் பாக்கியலட்சுமி கலை இயக்குனராக ‘டிவி வசந்தன்’ பாடல் ஆசிரியர் பிரசாந்த் மற்றும் அகசி பியர்” மற்றும் காஸ்டியூம் “சரஸ்வதி ரமேஷ்” மேக்கப் “தீபா” நடன இயக்குனர் “சியா” ஸ்டண்ட் இயக்குனர் “எழில் வேந்தன்” பாடகர் பிரசன்னா ஆதிசேஷ, லிகோன் அன்பு, ரமேஷ், விக்னேஷ், இணை இயக்குனராக ‘சுதாகர்’, ‘ராஜ் கணேஷ்’ பணியாற்றியுள்ளனர். துணை இயக்குனராக மதிமாறன்,கிருபாநிதி, ஸ்டில்ஸ் “சந்துரு” , BM கார்த்திக் பி.ஆர்.ஓ வாக செயல்படுகிறார், இணை தயாரிப்பாளராக ருத்ர பைனா ஃபிலிம்ஸ் ஆர் வெங்கட் ராவ் இணைந்திருக்கிறார்.
இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் குவிந்து வருகிறது… மேலும் ஏப்ரல் மாதம் 24ஆம் ,2026 தேதி பாவக்கூத்து (கதை சொல்லல் பரிமாற்ற பயணம் ) திரைப்படம் வெளியாக உள்ளது என ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!