சினிமா

பியூர் சினிமாவும் நானும் – நீங்கள் பேச ஓரு மேடை

69views
நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி பியூர் சினிமா புத்தக அங்காடி 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 11 ஆம் ஆண்டு தொடக்க விழா நாளை மாலை 5 மணிக்கு பியூர் சினிமா அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கென தனி சிறப்பு விருந்தினர்கள் இல்லை. நானும் பியூர் சினிமாவும் என்கிற தலைப்பில் வாசகர்களே சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பியூர் சினிமாவுடனான உங்கள் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ளலாம். கடந்த 10 ஆண்டுகளாக பல நூறு உதவி தொழில்நுட்ப்க்கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது. பயிற்சிப்பட்டறைகள், சினிமா தொழில்நுட்ப புத்தகங்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது. பியூர் சினிமா மூலம் நீங்கள் அடைந்த பலன்களை, உங்கள் அனுவத்தை பகிற நாளை பியூர் சினிமாவிற்கு நேரடியாக வந்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள். நீங்கள் பேச விரும்பினால் பியூர் சினிமா எண்ணில் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். முன்பதிவு செய்தோர் மட்டுமே நிகழ்வில் பேச இயலும். முன்பதிவு செய்ய: 9840644916
இயக்குநர்கள் உள்ளிட்டவர்கள், தமிழ் ஸ்டுடியோ நலன் விரும்பிகள், நண்பர்கள் எல்லாரும் பங்கேற்று நாளை நிகழ்வை இனிதாக்குங்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!