சினிமா

‘’லீடர்’’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம்

92views
சென்னை வடபழனி அமைந்துள்ள கமலா திரையரங்கில் ‘’லீடர்’’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி அகில இந்திய செயலாளர் பி. சுதாகர் மற்றும் துணைச் செயலாளர் சுரேஷ் அவர்களின் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
திரைப்படம் திரையிடப்பட்ட காட்சியின் போது ரசிகர்கள் உற்சாகக் குரலில் ஆரவாரம் செய்து கொண்டாடினர்,
அந்த வேளையில் கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகர் “கூல் சுரேஷ்” ரசிகர்களுடன் சேர்ந்து “கேக்” வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அவரின் வருகையால் திரையரங்கம் முழுவதும் கொண்டாட்டக் களமாக மாறியது.  ரசிகர்கள் கைத்தட்டல், கோஷங்கள் மற்றும் குத்தாட்டத்துடன் ‘லீடர்’ படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்,
இப்படியான ரசிகர் ஆதரவு மற்றும் கொண்டாட்டம் திரைப்படத்தின் வெற்றியை மேலும் உயர்த்துவதாக அமைந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!