Uncategorizedசினிமா

ஜோரா சினிமாஸ் கம்பெனியின் முதல் திரைப்படம் 100 நாள் கடந்து வெற்றி நடைபோடுவதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பிராட்வே சுந்தர் கடிதம்

277views
அனைவருக்கும் வணக்கம்….
உயிர் மூச்சு திரைப்படம் இன்று 100வது நாள் வெற்றி நடை போடுகிறது..
இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் தயாரிப்பாளர் அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி, நமது சங்கத் தலைவர் ஆர். கே. அன்பு செல்வன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் !
இந்த படம் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பேசப்படுவதற்கு கதை தான் காரணம்… திரைக்கதை பக்கபலமாக இருந்தது…
விரைவில் தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகப் போகும் உயிர் மூச்சு திரைப்படம் நமது சங்கத்திற்கு பெரிய அளவில் பெயர் வாங்கித் தரும் என்று நான் நம்புகிறேன்…
நமது சங்கத்தில் முதல் 100 நாள் ஓடிய திரைப்படம் உயிர் மூச்சு !
என்ற தலைவரின் பேச்சு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!
தன்னம்பிக்கை அளிக்கிறது!!
ஜோரா சினிமாஸ் கம்பெனியின் முதல் திரைப்படம் 100 நாள் கடந்து வெற்றி நடைபெறுகிறது என்பது இயக்குனராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது !
விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ் ஆகப்போகும் உயிர் மூச்சு திரைப்படம் உங்கள் ஊரில் ரிலீஸ் ஆகும்போது அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்..
என்றும் அன்புடன்
உங்கள் இயக்குனர்
பிராட்வே சுந்தர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!