Uncategorizedசினிமா

‘யாதும் அறி­யான்’ பர்ஸ்ட் லுக் நெல்­லை­யில் பிர­மாண்ட வெளி­யீடு

19views
அதிர வைக்­கும் சைக்கோ திரில்­லர் கதை­யில் இயக்­கு­னர் கோபி இயக்­கத்­தில் புது­மு­கம் நடி­கர் தினேஷ் கதா­நா­ய­க­னாக நடித்து உரு­வா­கி­யுள்ள ‘யாதும் அறி­யான்’ பர்ஸ்ட் லுக் போஸ்­டர் வெளி­யீட்டு விழா நெல்­லை­யில் பிர­மாண்­ட­மாக நடந்­தது.
பிரேக்­கிங் பாயின்ட் பிக்­சர்ஸ் நிறு­வ­னம் தயா­ரித்த இயக்­கு­னர் கோபி இயக்­கத்­தில் புது­மு­கம் நடி­கர் தினேஷ் கதா­நா­ய­க­னா­க­வும், நாய­கி­யாக ப்ரா­னா­வும் நடித்­துள்­ள­னர். இவர்­க­ளு­டன் தேசிய விருது பெற்ற நடி­கர் அப்­புக்­குட்டி, தம்பி ராமையா, விஜய் ‘டிவி’ கே.பி.ஒய்.ஆனந்­த­பாண்டி, ஷியா­மல், ஷேக் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்­துள்­ள­னர்.
கொல்­லி­ம­லை­யில் இருக்­கும் ஒரு பழைய பங்­க­ளா­விற்கு சென்ற நான்கு நண்­பர்­கள் சந்­திக்­கும் பிரச்­னை­களை மையப்­ப­டுத்தி சைக்கோ திரில்­லர் ஜான­ரில் இது­வரை யாரும் கையா­ளாத ஒரு புதிய யுக்­தி­யில் இயக்­கு­னர் கோபி பட­மாக்­கி­யுள்­ளார். துணை இயக்குனராக ராஜகுமாரி செயல்பட்டார்.
இயக்குனர் கோபி, ஏற்­க­னவே இயக்­கிய ‘தி பிளைண்ட் டைரக்­டர்’ சிறந்த குறும்­ப­டத்­திற்­கான தேசிய விருது பெற்­றுள்­ளது.
‘யாதும் அறி­யான்’ படத்­தில் நாய­க­னாக நடித்­துள்ள தினேஷ் புது­மு­கம் என்­றா­லும், இந்த படத்­தில் நடிக்க ஒரு மாதம் தீவிர பயிற்சி எடுத்து, படத்­தில் தத்­ரூ­ப­மாக நடித்து உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.
படத்­தில் தொழில் நுட்­பக்­கு­ழு­வில் ஒளிப்­ப­திவை எல்.டி.,யும், இசையை தர்­ம­பி­ர­கா­சும் அமைத்­துள்­ள­னர். நெல்லை லெனின் கலை இயக்குனராக செயல்பட்டார். எஸ்.கே.சித்­திக் பாடல்­கள் எழுத, தர்மதுரை, சுரேஷ் படத்­தின் பி.ஆர்.ஓ.,வாக பணியாற்றுகின்றனர்.
படப்­பி­டிப்பு முழு­­தும் முடி­வ­டைந்த நிலை­யில் யாதும் அறி­யான் படத்­தின் பர்ஸ்ட் லுக் போஸ்­டர் வெளி­யீட்டு விழா நெல்லை வண்­ணார்­பேட்டை தனியார் ஹோட்டலில் நடந்தது.
பர்ஸ்ட்­லுக் போஸ்­டர் வெளி­யா­னது ரசி­கர்­க­ளி­டையே பெரும் வர­வேற்பை பெற்­றுள்­ளது. போஸ்­டர் வெளி­யி­டப்­பட்­டதை தொடர்ந்து படத்­தின் மீதான எதிர்­பார்ப்பு ரசி­கர்­க­ளி­டையே அதி­க­ரித்­துள்­ளது.
இது­கு­றித்து இயக்­கு­னர் கோபி, நடி­கர் தினேஷ் கூறி­ய­தா­வது:
‘‘படத்­தில் நடித்­த­வர்­கள் அனை­வ­ரும் இரவு, பக­லாக அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­டன் முழு ஈடு­பாட்­டோடு, சம்­பந்­தப்­பட்ட கதா­பாத்­தி­ரங்­க­ளா­கவே மாறி தங்­கள் நடிப்பை, திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். படம் நிச்­ச­யம் வெற்­றியை பெற்­றுத் தரும். படத்­தில் நடித்­த­வர்­கள் அளித்த ஒத்­து­ழைப்­பால் திட்­ட­மிட்­ட­படி குறித்த காலத்­தில் படத்தை முடிக்க முடிந்­தது. படத்­தின் டிரை­லர் விரை­வில் வெளி­யி­டப்­ப­டும். ஜூன் அல்­லது ஜூலை மாதத்­திற்­குள் படம் வெளியா­கும்,’’ என்­ற­னர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!