தமிழகம்

தனியார் ஹோட்டலில் “ஐரோப்பிய பாரம்பரிய ” ஜிஞ்சர் ஹவுஸ் எனும் குழந்தைகள் தயாரித்த கேக் வீடு மற்றும் கிறிஸ்மஸ் குடிலுடன் கிறிஸ்மஸ் தாத்தா மற்றும் குழந்தைகளின் நடனம். 27 வகை கேக்குகள், 17 வகை குக்கிஸ் கொண்ட கேக் கண்காட்சி. உலக நன்மை வேண்டி அமைதி , சமாதானம். சகோதரத்துவம் நிலவ சிறப்பு பிராத்தனையுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் துவக்கம்

102views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நான்கு வழி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள் தயாரித்த “ஐரோப்பிய பாரம்பரிய” ஜிஞ்சர் ஹவுஸ் கேக் கிறிஸ்மஸ் குடில்
கடந்த 3 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்திய கொரான எனும் கொடிய நோய் பாதிப்பிலிருந்து உலகம் முழுவதும் மீண்டும்  அமைதி, சகோதரத்துவம், சந்தோசம் தலைத்தோங்க
சிறப்பு பிரார்த்தனையுடன் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கான விழா துவங்கியது.
பேராயர் அதிசயம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முன்னோட்ட நிகழ்வாக 18 அடி உயர கிறிஸ்மஸ் மரம் அலங்கார மின்விளக்குகளால் அமைக்கப்பட்ட பிராமாண்ட கேக் திருவிழா பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது .

இதில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு முதன்மை சமையல் நிபுணர் கோபி விருமாண்டி ஆலோசனைப்படி மாணவர்கள் தாங்களாக “ஐரோப்பிய பாரம்பரிய “ஜிஞ்சர் ஹவுஸ் எனும் கேக் குடிலை தயாரித்தனர்.
இதனை வரும் ஜனவரி மாதம் வரை (கேக்கை) பொதுமக்கள் பார்வையிடலாம் என கோபி விருமாண்டி கூறினார்.
மேலும் 4 அடி அளவில் கிறிஸ்மஸ் கேக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.  ரம் கேக், பனானா வால் நட் , மின்ஸ் பீ, கேரட் கேக் வித் புரேஸ்டிங், பிளம் பும் புட்டிங் உள்ளிட்ட  27 வகையான கேக் வகைகளும் 18 வகையான குக்கிஸ்களும் (பிஸ்கட்) கண்காட்சியில் இடம் பெற்றது.
கிறிஸ்மஸ் விழாவிற்கு முன்னோட்டமாக உலக நன்மை வேண்டி பிரார்த்தனையுடன் துவங்கியது  ஏராளமனோர்களிம் பெரும் வரவேற்பை பெற்றது.
பொது மேலாளர் பால் அதிசய ராஜ் கூறுகையில், கடந்த 2 வருட கால கட்டங்களில் உலகை அச்சுறுத்திய கொரான பெருந்தொற்று காரணமாக எந்தவித கெண்டாட்டம் இல்லாமல் இருந்தோம். வரும் காலங்களில் மக்கள் அனைவரும் சந்தோசமாய் வாழ சிறப்பு பிரார்தனையுடன் கிறிஸ்மஸ் நிகழ்வை துவக்கியுள்ளோம். மாணவர்கள் ஜிஞ்சர் ஹவுஸ் எனும் குடில் அமைத்துள்ளனர். வரும் 2023ம் ஆண்டு மகிழ்ச்சி சந்தோசமாக அமையவேண்டும் என்பதற்காக கிறிஸ்மஸ் நிகழ்ச்சி என கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!