தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா மாணவர்கள் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தினர்.

302views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை திருவிழா நடைபெற்றது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது தனி திறன்களை வெளிப்படுத்தினர். முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தேவி தலைமை.ஏற்றார். உதவி தலைமை ஆசிரியர் தீபா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் கேபிள் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன்,மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!