தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா; பரிசுகள் வழங்கி காப்பாட்சியர் பாராட்டு

232views
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி பாராட்டினார்.
விழாவில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் போல் மாறுவேடம் அணிந்து வசனம் பேசினர். நான்கு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாரதியாரின் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 80க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பாரதியாரின் பாடல்களை பாடினார். ஏழு எட்டு ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு குழந்தைகள் தின ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கவிஞர் சுப்பையா, ஜே சி ஐ சுப்புலட்சுமி, ஜேசிஐ முருகானந்தம், ஜேசிஐ பிரமு மற்றும் அருங்காட்சியக பணியாளர் உலகநாதன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாறுவேட போட்டியில் சிறப்பாக மாறுவேடம் தரித்து வந்த 20 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!