தமிழகம்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் காவிரி டெல்டாவை பாதுகாக்கும் உயரிய நோக்கில் தமிழர் நீர் உரிமை மாநாடு!

41views
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் மேகதாது அணையை தடுப்போம்-தமிழர் நீர் உரிமை காப்போம் என்கிற முழக்கத்துடன் காவிரி டெல்டாவை பாதுகாக்கும் உயரிய நோக்கில் தமிழர் நீர் உரிமை மாநாடு இதன் தலைவர் வழக்கறிஞர் க.சக்திவேல் அவர்கள் தலைமையில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைப்பெற்றது.
மேலும் இதில் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.இரவி, தமிழ் தன்னுரிமை இயக்கத் தலைவர் பாவலர் ராமச்சந்திரன், தமிழர் அறம் பட்டுக்கோட்டை ராமசாமி, தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் ஓ.ஏ.நாராயண சாமி, உழவர் உழைப்பளர் சங்கத் தலைவர் வேல்முருகன், தமிழர் கட்சித் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ் தேச கட்சித் தலைவர் தமிழ் நேயன், காந்தீய மக்கள் இயக்கத் தலைவர் சிவஞானசம்பந்தம், உலகத் தமிழின பேரியக்கத் தலைவர் கரு.சந்திரசேகரன், தமிழாராட்சி கட்சித் தலைவர் வெ.க சந்திரமோகன், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி செயலாளர் ஆர். பிரபாகரன்,மாநில மகளிரணித் தலைவர் காஞ்சனா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் அதன் தலைவருக்கு கண்டனம் தெரிவித்தும், காவிரியில் மேகதாது அணை கட்ட முயற்சித்து வரும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும், கர்நாடக அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் வாரியத்தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், கர்நாடக அரசிற்கு ஆதரவாக செயல்படும் மத்திய பா.ஜ.க அமைச்சரை கண்டித்தும், தமிழகத்தை பாலைவனமாக ஆக்க துடிக்கும் திமுக அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட வேண்டும் என்று முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்தும்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியும், காவிரி டெல்டாவின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் பயிர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும், தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், காவிரி டெல்டா மாவட்டத்தில் பாராளுமன்ற தொகுதிகளில் பொது வேட்பாளர் களை நிறுத்த அணைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்றும்,தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக விரோதமாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு கட்சிகள் தோற்கடிக்க பட வேண்டும் என்று இம்மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர்: தேவி, சென்னை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!