தமிழகம்

தமிழே உலக மொழிகளின் தாய் என்பதை தமிழர் நமக்கெல்லாம் உரைத்த மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களின் 123 ஆம் ஆண்டு விழா

56views
சென்னை அடையாறு முத்தையா இராமநாதன் நகரில் இருக்கும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அதன் இயக்குநர் திரு விசயராகவன் அவர்கள் மிகச் சிறப்பாக அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மொழிஞாயிறு எனப்படும் பாவாணர் அவர்களின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் அவரை பற்றிய தமிழறிஞர்களின் உரை நிகழ்த்தப்பட்டது.
அதில் பாவலரேறு அவர்களின் புதல்வர் துரை. மா பூங்குன்றன், புலவர் அரத்தினவேலனார் , எழுத்தாளர் கண்ணன், வழக்கறிஞர் திருமலை, தோழர் அ சி சின்னப்பாதமிழர், கரு சந்திரசேகரன், அரசெழிலன், சிவகாளிதாசன் போன்ற தமிழ் நல்லார் பெருமக்கள் உரையாற்றினர்.

அதில் மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களின் சிறப்புகளை தமிழர் தன்னுரிமை கட்சித் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் பேசி சிறப்பித்தார். இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவியர் பலரும் கலந்து கொண்டனர். வருகை தந்த தமிழ் அறிஞர்களுக்கு “அகராதி ஆய்வு நூல்’ ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!