21views
சென்னை, மஹாகவி பாரதி நகர் சத்தியம் மினி அரங்கத்தில் ‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
. உலக தமிழின பேரியக்கம் சார்பில் நடைபெற்ற மே தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில், ” இனத்திற்குள் இனம் மோதிக் கொள்வதை நிறுத்த வேண்டும். இனக் குழுக்களுக்குள் உண்டாகும் மோதல் போக்கை தடுத்து நிறுத்தியாக வேண்டும்” என்று தமிழர் தன்னுரிமை கட்சி தலைவர் பாவலர் மு.ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்
ஷெட்யூல்டு வகுப்பினர் ஐக்கிய முன்னணி தலைவர் திருமதி ஜெ.ரேவதி நாகராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றும்போது ‘ தென்கலை வடகலை எலலாமே நம்மை பிரிப்பதற்கான சூழ்ச்சியே …’என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பேரவை நிறுவன தலைவர் ஏ.டி.இ .ராமமூர்த்தி, அகில இந்திய லஞ்ச ஒழிப்பு சேர்மன் ப.பாபு, நான் மீடியா தேவி, தமிழ் தேச விடுதலை கட்சி செந்தமிழ் குமரன் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் மே 18 முள்ளிவாய்க்கால் இனக் கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மலர்த்தூவி மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில மகளிரணி பொருளாளர் மா.சசிரேகா நன்றியுரை கூறினார்.
add a comment