தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கங்காபூர்வாலா பொறுப்பேற்பு

28views
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பொறுப்பேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார். பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள  டி.ராஜா கடந்த 24ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றதால், அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ். வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.கடந்த 1962-ம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985-ம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.

கடந்த 2010- ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார். அடுத்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!