தமிழகம்

பரமக்குடியில் பொது சுகாதார  நூற்றாண்டு விழா  

97views
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு  மருந்து துறை சார்பில் பொது சுகாதார  நூற்றாண்டு விழா  நடந்தது. விழா மலரை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டார். சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பரிசு வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் (திமுக),  திருவாடானை சட்டமன்ற  கருமாணிக்கம் (காங்கிரஸ்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன் (முன்னாள் எம்எல்ஏ,, நகராட்சி தலைவர் சேது.கருணாநிதி,  சுகாதார துறை துணை இயக்குநர்  பிரதாப் குமார், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் செந்தில்குமார், பொது சுகாதார துறை நிலை அலுவலர் ரமேஷ், கண்காணிப்பு அலுவலர்கள் குமார், கிருஷ்ணசாமி,  பாலசுப்ரமணியன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!