தமிழகம்

மதுரை மாவட்டம் பேச்சிகுளத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

282views
மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பேச்சிகுளம் அய்யனார்புரத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் நடராஜகுமார் மற்றும் உதவி இயக்குநர் சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி பேச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி வாசு தலைமையில் துணைத் தலைவர் கார்த்திக் பாண்டி முன்னிலையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் தேன்மொழி, சிந்து, ராமலட்சுமி ஆகியோர் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல்,கன்று மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், சிகிச்சை பணி, மருந்து கொடுத்தும். மேலும் கால்நடைகளுக்கு எந்த மாதிரியான தீவனங்களை வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்தனர்.

கால்நடைகளுக்கு தடுப்பு கலவை, ஊறுகாய் புல் வழங்கினர். இது தவிர சிறந்த கடேரிகன்று மற்றும் சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஊமச்சிகுளம், பேச்சிக்குளம், வீரபாண்டி ஊராட்சி போன்ற சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்று பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர்கள் கலைவாணி, கோவிந்தன், சுகப்பிரியா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலாவதி, ஜெயாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!