ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வெற்றி யாருக்கு என கணிப்பது கடினம்… ரிச்சர்ட் ஹாட்லீ சொல்கிறார்
இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே நடக்க உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார் என்பதை கணிப்பது மிகக் கடினம். இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவையாக உள்ளன என்று நியூசிலாந்து அணி முன்னாள் நட்சத்திரம் ரிச்சர்ட் ஹாட்லீ கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜியஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி தொடங்கி நடைபெற...