விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் சுமித் மாலிக் இடைநீக்கம்

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ள மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஜூலை 23ல் தொடங்குகிறது. இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கு 90க்கும் அதிகமான இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 8 பேர் மல்யுத்த வீரர், வீராங்கனைகள். ஆண்கள் 125 கிலோ எடை பிரிவில் சுமித் மாலிக் பங்கேற்க இருக்கிறார். அதற்கான தகுதிச்சுற்றில் கடந்த மாதம் பங்கேற்றபோது அவரின் சிறுநீர் மாதிரிகள்...
செய்திகள்விளையாட்டு

“‘கோலி’ தான் எல்லாத்துக்கும் ‘காரணம்’.. அவர் கொடுத்த அந்த ஒரு ‘வாய்ப்பு’.. அது இல்லன்னா கஷ்டம் தான்..” நெகிழ்ச்சியுடன் மனம் திறந்த ‘சிராஜ்’!!

இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, இன்று இங்கிலாந்து சென்றடைந்தது. மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இரண்டு அணிகளும், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசுர பலத்துடன் விளங்குவதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற, நிச்சயம் இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், இந்த...
செய்திகள்விளையாட்டு

இந்திய அணியின் அந்த 2 பேர் பந்து வீச்சை எதிர் கொள்ள பாகிஸ்தான் அணியே திணறும்.! சோயிப் மலிக் ஓப்பன் டாக்.!

அனைத்து நாடு அணியிலும் மிக சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில பந்து வீச்சாளர்களிடம் அந்த பேட்ஸ்மேன்கள் திணறுவது வழக்கம். அவ்வாறு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜாகீர்கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஓவர்களில், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் மிகவும் சிரமப்பட்டு விளையாடுவார். இதுகுறித்து சோயிப் மாலிக் சமீபத்தில் வெளியிட்ட பேட்டியில், ஜாஹீர் கான் மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய இருவரும், எப்போதுமே பேட்ஸ்மேன்களின் பேட்டின் முனையை குறிவைத்து...
செய்திகள்விளையாட்டு

மன ஆரோக்கியம் மிக முக்கியம், மைதானத்தை விட்டால் விடுதி என்ற நிலை திணறடிக்கிறது: விராட் கோலி ஆதங்கம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி மற்றும் இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணி புறப்பட்டு சென்றது. ஐசிசி போட்டி அட்டவணையோ வீரர்களை வைத்து சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது, ஓய்வு ஒழிச்சல் இல்லாத கிரிக்கெட் என்றால் மூச்சு விடுவதற்கு எங்கு இடம் என்று கேட்கிறார் விராட் கோலி. ஐபிஎல் பயோ பபுளை விடுத்து இப்போது இங்கிலாந்தில் பயோ பபுள், இதில் காலந்தள்ளுவது சாதாரணமல்ல. இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், பிறகு ஒன்றரை மாத...
செய்திகள்விளையாட்டு

அறிமுக டெஸ்ட்டில் சதமடித்து அசத்தல் : டெவன் கான்வேயின் 136 நாட் அவுட்டினால் நியூசிலாந்து டாப்

இங்கிலாந்துக்காக அறிமுக டெஸ்ட்டில் ஆடும் வலது கை வேகப்பந்து வீச்சாலர் ஆலி ராபின்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேன் வில்லியம்சன் லெஜண்ட் ஆண்டர்சன் பந்தில் பவுல்டு ஆனார். 2019-க்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்க்க ரசிகர்கள் மைதானத்துக்கு வந்தனர். டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் எடுக்க டாம் லேதம் (23) ரன்களில் ஆலி ராபின்சன் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆகி வெளியேறினார். பிறகு ராபின்சன், ராஸ் டெய்லரை...
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: நடப்பு சாம்பியன் கரோலினா மரின் விலகல்!

டோக்கியோ ஒலிம்பிக்ஸிலிருந்து நடப்பு சாம்பியன் கரோலினா மரின், காயம் காரணமாக விலகியுள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கரோலினா மரின் 19-21, 21-12, 21-15 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார். சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருவதால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான பயிற்சியின்போது கரோலினா மரினுக்கு இடது முழங்காலில் காயம்...
செய்திகள்விளையாட்டு

மனச்சோர்வால் விலகுகிறேன்…ஒசாகா அதிரடி அறிவிப்பு

ஜப்பான் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா (23 வயது, 2வது ரேங்க்), மனச்சோர்வு காரணமாக பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளார். நடப்பு தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ருமேனியாவின் பேட்ரிசியா மரியாவை வீழ்த்திய ஒசாகா, போட்டிக்கு பின்னர் நடக்கும் சம்பிரதாயமான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார். மனச்சோர்வு காரணமாக மீடியாவை சந்திக்க விரும்பவில்லை என்ற அவரது...
செய்திகள்விளையாட்டு

ரூ.11 லட்சம் அபராதம்! நவோமி ஒசாகா அதிரடி முடிவு..!

பாரிஸில் கடந்த 30ம் தேதி நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தினார். இதையடுத்து, நடந்த பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்ததால், அவருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
செய்திகள்விளையாட்டு

நேற்று துபாயில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

துபாயில் தற்போது ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் நேற்றுவரை 51 பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று ஒரே நாளில் இரு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு தங்கப்பதக்கத்தை இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நேற்று நடந்த ஆண்களுக்கான 91 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற கஜகஸ்தானைச் சேர்ந்த வாசிலி லிவிட்டை வீழ்த்தித் தங்கப்பதக்கத்தைக்...
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் அட்டவணை குறித்த சூப்பர் அப்டேட்… பிசிசிஐ அதிகாரி சொன்ன தகவல்.. புதிய தேதிக்கு மாற்றம்!

ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தும் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிக சம்பளம் பெறும் நம்பர்.1 கேப்டன்.. கோலி இல்ல - இவருக்கா இவ்ளோ சம்பளம்? இதுவரை 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடத்தப்படவேண்டியுள்ளது. இதற்காக 30 நாட்கள் கால இடைவெளிக்காக பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி...
1 64 65 66 67 68 74
Page 66 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!