விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி: பிசிசிஐ துணை தலைவர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் 29 போட்டிகள் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் மீதி போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் மீதி போட்டிகள் நடைபெறும் என்று செய்திகள் கசிந்தன. இந்த நிலையில் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அவர்கள் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில்...
செய்திகள்விளையாட்டு

சர்ச்சையை கிளப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பதிவு… மீம் போட்டு முற்றுப்புள்ளி வைத்த அஸ்வின்

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடர்பாக வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறிய கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்ட நிலையில், அஸ்வின் பகிர்ந்த மீம் பதிவின் வாயிலாக மஞ்ச்ரேக்கர் விளக்கமளித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 37 டெஸ்ட் போட்டிகளிலும், 74 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ள மஞ்ச்ரேக்கர் அவ்வப்போது முன்வைக்கும் விமர்சனங்களும், கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகும். இந்திய அணியின் ராக் ஸ்டார் ஆல்ரவுண்டர்...
செய்திகள்விளையாட்டு

சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த லயோனல் மெஸ்ஸியின் சாதனை முறியடித்தார் சுனில் ஷேத்ரி

இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான சுனில் ஷேத்ரி சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்களின் பட்டியலில் அர்ஜென்டினாவின் உலகளாவிய நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 36 வயதான சுனில் ஷேத்ரி இந்த சாதனையை 2022-ம் ஆண்டுக்கான பிபா உலகக் கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஏஎப்சி கோப்பை தொடர்களுக்கான ஆரம்பக்கட்ட தகுதி சுற்றில் வங்கதேச அணிக்கு எதிராக நேற்று முன்தினம்...
செய்திகள்விளையாட்டு

ட்விட்டரில் இனவெறி, பாலியல் தகவல் பதிவு இங்கிலாந்து வேகம் ராபின்சன் இடைநீக்கம்

இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஓல்லி ராபின்சன் இனவெறிக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் 8 ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் தகவல் பதிவு செய்ததற்காக அறிமுகமான முதல் தொடரிலேயே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் அரங்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பிரேசி, வேகம் ஆலிவர் எட்வர்ட் ராபின்சன் (27 வயது) அறிமுகமாயினர். முதல் நாளிலேயே 2 விக்கெட் எடுத்து அசத்திய ராபின்சன்...
செய்திகள்விளையாட்டு

வார்ம்-அப் போட்டியில் ஜார்ஜியாவை 3-0 என்று நொறுக்கிய நெதர்லாந்து

யூரோ கோப்பை 2021 கால்பந்து தொடருக்கான பயிற்சி வார்ம்-அப் போட்டியில் ஜார்ஜியா அணியை நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் நொறுக்கியது. நெதர்லாந்து வீரர்கள் மெம்பிஸ் தீபே, வவுட் வெகார்ஸ்ட், டீன் ஏஜ் வீரர் ரியான் கிரேவன்பர்ச் ஆகியோர் தலா 1 கோலை அடித்தனர். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் மெம்பிஸ் தீபே பெனால்டியை கோலாக மாற்றி நெதர்லாந்துக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால் முதல் பாதியில் ஜார்ஜியா அணி பிரமாதமாக...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்சை வீழ்த்தி ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் எலினா ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4 ,வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினாவுடன் மோதினார் . இதில் முதல் இரண்டு செட்டையும் ரிபாகினா கைப்பற்றினார். 2 வது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி ரிபாகினா அசத்தினார். இறுதிக்கட்டத்தில்...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரோஜர் பெடரர் விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக முன்னணி வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ரோஜர் பெடரர். 39 வயதான பெடரர் கடந்த சில வருடங்களாக காயம் காரணமாக தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரோஜர் பெடரர்...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : என்னை வீழ்த்த வேண்டுமெனில் .. வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் – டேனில் மெட்வடேவ்.!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 3 வது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரரான டேனில் மெட்வடேவ், ரெய்லி ஓபல்காவை வீழ்த்தி 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, " களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் போட்டியை நான் சிறப்பாக உணர்கிறேன்....
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்காக மனநல ஆலோசகர் குழுவை அனுப்பி வைக்கிறது இங்கிலாந்து

மனநல ஆலோசகர் குழு... இங்கிலாந்து சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்காக மனநல ஆலோசகர் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் தள்ளிவைக்கப்பட்டதோடு, ஜூலை 23-ஆம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி...
செய்திகள்விளையாட்டு

“புதிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறேன்”- பி.வி.சிந்து பேட்டி.!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார். பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சார்பில் பி.வி. சிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதாக வீராங்கனை பி.வி. சிந்து பேட்டி ஒன்றில் கூறும்போது, " பேட்மிண்டனில்' டாப் 10' -ல் உள்ள வீராங்கனைகள் அனைவருமே ஒரே மாதிரியான தரத்தை உடையவர்கள். ஒரு...
1 63 64 65 66 67 74
Page 65 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!