விளையாட்டு

விளையாட்டு

7வது முறையாக தங்க கால்பந்தை வென்ற மெஸ்ஸி.. ரொனால்டோ பாய்ச்சல்

கால்பந்து உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் தங்க கால்பந்து கோப்பையை 7வது முறையாக அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி வென்றார். பிரான்சில் உள்ள பிரான்ஸ் கால்பந்து என்ற வார இதழலால் வழங்கப்படுவது தான் தங்க கால்பந்து கோப்பை. 2010 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை இந்த விருதை ஃபிஃபாவும் இணைந்து நடத்தியது. பின்னர், இதிலிருந்து ஃபிஃபா விலகியது தனிக்கதை விருது கோபா அமெரிக்கா தொடரில் சாம்பியன்...
விளையாட்டு

ஐபிஎல்; விராட் கோலி உள்பட 3 வீரர்களை தக்க வைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அடுத்த ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஆமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஜனவரி மாதம் வீரர்களின் மெகா ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்க வைக்க ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு அனுமதி அளித்துள்ளது. தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும்....
விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா – பெங்களூரு ஆட்டம் ‘டிரா’

11 அணிகள் கலந்து கொண்டுள்ள 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. இந்த கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 84-வது நிமிடத்தில் கோல் அடித்த பெங்களூரு வீரர் ஆஷிக் குருணியன், 88-வது நிமிடத்தில் அவரே...
விளையாட்டு

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 345 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் 105 ரன், கில் 52, ஜடேஜா 50 ரன்  விளாசினர். கேப்டன் ரகானே 35, புஜாரா 26, அஷ்வின் 38 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ...
விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் தோல்வி

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் மனிகா பத்ரா- அர்ச்சனா ஜோடி 1-11, 6-11, 8-11 என்ற நேர் செட் கணக்கில் சாரா டி நட்டே- நி ஸியா லியான் (லக்சம்பர்க்) இணையிடம் பணிந்து வெளியேறியது. இதே போல் கலப்பு இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் மனிகா பத்ரா, தமிழகத்தின் ஜி.சத்யன் ஜோடி 5-11, 2-11, 11-7, 9-11...
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் அணி...
விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் – அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் சிம் யுஜினுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 21-19, 21-14 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் இரட்டையர் போட்டி ஒன்றில், இந்தியாவின் சாத்விக்சாய் ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை,...
விளையாட்டு

IND vs NZ: ‘2ஆவது டெஸ்ட்’…ஷ்ரேயஸ் ஐயர் எந்த இடத்தில் களமிறங்குவார்? லக்ஷ்மன் அதிர்ச்சி தகவல்!

இந்தியா, நியூசிலாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 345/10 ரன்கள் சேர்த்தது. அடுத்துக் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி 129/0 ரன்கள் சேர்த்துள்ளது. டாம் லதாம் 50 (165), வில் யங் 75 (180) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இன்று மூன்றாவது நாள் ஆட்டம் துவங்கி நடைபெறும். முதலில்...
விளையாட்டு

“தல தோனி சொன்ன டிப்ஸ் தான்”..! ‘சிக்ஸர் அடிக்க உதவியா இருந்துச்சி’ .. ஷாருக்கான் பகிர்ந்த ரகசியம்

சையது முஷ்டாக் அலி தொடரில் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழக அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஷாருக்கான் அதன் ரகசியத்தை கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின .இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இப்போட்டியில் கடைசி பந்தில் தமிழக அணி வெற்றி...
விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழை

ஒடிசாவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி, 13க்கு 1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. புவனேஸ்வரத்தின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், கனடாவும் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தது. துணை கேப்டன் சஞ்சய் மற்றும் அரஜித் சிங் ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்தனர்....
1 32 33 34 35 36 74
Page 34 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!